ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பு அதிகாரி நியமனம்

ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பு அதிகாரி நியமனம்
X
சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சிறப்பு அதிகாரியாக தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ் நியமனம்

சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சிறப்பு அதிகாரியாக தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ் நியமனம்- தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளில் இருந்து 2000 வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 2,500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பு அதிகாரியாக தாரேஸ் அகமது ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story
ai tools for education