6 4 4 4 4 1 அர்ஷத் கானை டரியலாக்கிய அஜிங்யா ரஹானே!

6 4 4 4 4 1 அர்ஷத் கானை டரியலாக்கிய அஜிங்யா ரஹானே!
X
பியூஸ் சாவ்லா ஓவரில் பேக் டூ பேக் பவுண்டரிகளை விளாசி அஜிங்யா ரஹானோ அரை சதம் அடித்தார்.

மும்பை அணி வீரர் அர்ஷத் கான் வீசிய 4வது ஓவரில் அஜிங்யா ரஹானோ பேக் டூ பேக் பவுண்டரிகளை விரட்டி, ஒரே ஓவரில் 23 ரன்களை அடித்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 4 ஓவர்களில் 44 ரன்களைக் கடந்தது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச திட்டமிட்டது. மும்பை அணியின் வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கினர். ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் சென்னை வீரர்களின் பந்துகளை பறக்க விட்டனர். ரோஹித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்களும், இஷான் 21 ரன்களில் 32 ரன்களும் எடுத்தனர். ரோஹித் சர்மா துஷார் பாண்டே பந்துவீச்சிலும், இஷான் ஜடேஜா பந்து வீச்சிலும் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சூர்ய குமார் பெரிதாக சோபிக்காத நிலையில், திலக் வர்மா 22 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் கடைசி நேரத்தில் 31 ரன்கள் எடுத்து மும்பை அணியின் ஸ்கோரை 157 ரன்களாக மாற்றினர். 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டிவான் கான்வே, ருத்துராஜ் ஆகியோர் களமிறங்கிய நிலையில், முதல் ஓவரிலேயே கான்வே அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து அஜிங்யா ரஹானோ உள்ளே வந்தார்.

முதல் ஓவரை நிதானமாக ஆடிய ரஹானே, அர்ஷத் கான் வீசிய ஓவரை பொளந்து கட்டினார். முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டிய அவர் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை வெளுத்து வாங்கினார். அடுத்து கேமரூன் கிரீன் ஓவரிலும் சிக்ஸர் விளாசி தன்னை நிரூபித்தார் ரஹானே.

பியூஸ் சாவ்லா ஓவரில் பேக் டூ பேக் பவுண்டரிகளை விளாசி அஜிங்யா ரஹானோ அரை சதம் அடித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!