Ind Vs SA 2nd ODI: இரண்டாவது ஒருநாள் போட்டியை வெல்லும் முனைப்பில் இந்தியா
Tamil Sports News -இந்திய தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. மழை குறுக்கிட்ட ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 40 ஓவர்களில் 249 ரன்கள் எடுத்தது, பின்னர் ஆடிய இந்தியா 240-8 என்று தோல்வியை தழுவியது இந்தியா தென்னாப்பிரிக்காவை 110-4 என்ற விகிதத்தில் இருந்தபோது, ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரின் அரை சதங்கள் தென்னாப்பிரிக்காவை கௌரவமான ஸ்கோரை எட்ட அனுமதித்தது.
இந்திய அணியில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்திருந்த போதிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. சஞ்சு சாம்சன் எடுத்த 63 பந்துகளில் 86 ரன்கள், இந்தியாவை வெற்றியை நோக்கி நெருங்க செய்ததது. ஆனால் இந்தியாவை வெற்றிக்கோட்டைத் தாண்டி அழைத்துச் செல்ல முடியவில்லை. முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்தியா போட்டியை சமன் செய்யும் நோக்கத்தில் களமிறங்கும்.
இந்தியா தென்னாப்பிரிக்கா, 2வது ஒருநாள் போட்டி
இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் ஊட்டி ராஞ்சியில் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, ராஞ்சியின் வானிலை வெப்பமாகவும் மந்தமாகவும் இருக்கும். எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். இருப்பினும், இது ஆட்டத்தின்போது குறைய வாய்ப்புள்ளது. மழைப்பொழிவைப் பொறுத்தவரை, நாம் எதையும் கணிக்க முடியாது. எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஆட்டத்தையும் ரசிகர்கள் காண முடியும்.
ரஞ்சி மைதானம் தோனியின் சொந்த மைதானம் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த மைதானத்தில் இதுவரை ஐந்து ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த ஐந்து ஆட்டங்களில் முதலில் மற்றும் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிகள் தலா இரண்டில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் எந்த முடிவும் இல்லை. இந்த இடத்தில் விளையாடிய நான்கு ஒருநாள் போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரியாக 253.5 ரன்களாக இருந்தது, இது ராஞ்சி ஆடுகளம் காலப்போக்கில் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
இந்திய அணியை பொறுத்தவரை முகமது சிராஜ் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் இதுவரை ஈர்க்கத் தவறியுள்ளனர், இதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும் .
இந்தியா இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 88 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 35ல் வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 50 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அணி விபரங்கள்
இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில் , ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (வி.கீ), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ரவி பிஷ்னோய், அவேஷ் கான் (தீபக் சாஹர் காயம் காரணமாக)
தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக் (வி.கீ), மலான், டெம்பா பவுமா (கேப்டன்), ஐடன் மார்க்ரம், கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ட்ஜே
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu