நீச்சலில் தேசிய சாதனை படைத்த நடிகர் மாதவன் மகன்

நீச்சலில் தேசிய சாதனை படைத்த நடிகர் மாதவன் மகன்
X
புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.

நீச்சல் வீரரான நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரில் நடைபெறும் 48-வது ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற வேதாந்த், தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த 47வது ஜூனியர் நேஷனல் அக்வாடிக் சாம்பியன்ஷிப் 2021ல் ஏழு பதக்கங்களை வென்றார். இந்த ஆண்டு கலிங்கா அரங்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:01.73 விநாடிகளில் தூரத்தை கடந்து தங்கம் வென்றார் வேதாந்த். இதற்கு முன்பு இதே போன்ற 1500 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் 16:06.43 என இருந்த தேசிய சாதனையை தற்போது அவர் முறியடித்துள்ளார்.

இப்போட்டியில் அவர் மகாராஷ்டிரா சார்பில் பங்கேற்றார். வேதாந்தின் இந்த வெற்றியை மாதவன் டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது