சென்னை வந்தஎம்.எஸ்.தோனி; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சென்னை வந்தஎம்.எஸ்.தோனி; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
X
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னை வந்தடைந்தார்.

ஐபிஎல் 2024, 17வது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸுக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெறுகிறது. இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னை வந்து அடைந்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கவுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தொடங்கிய நிலையில், அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று சென்னை வந்தடைந்தார்.

முன்னதாக, குஜராத் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானியின் பீரி வெட்டிங் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. அதில் எம்.எஸ் தோனி தனது மனைவி சாக்‌ஷியுடன் கலந்து கொண்டார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

இந்த சூழலில், அங்கு இருந்து நேரடியாக சென்னை வந்து உள்ளார், தோனி. மேலும், ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே தோனி தனது விண்டேஜ் ஹேர்ஸ்டைலுடன் சென்னைக்கு வந்துள்ளார். இது சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

சில நாட்களுக்கு முன்பு சென்னை அணியின் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் உள்பட சில வீரர்கள் சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தோனி இன்று சென்னைக்கு வருகை தந்த நிலையில், நாளை முதல் தினமும் மாலை பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!