இங்கிலாந்துடன் 2வது ஒரு நாள் போட்டி: தொடரை கைப்பற்ற இந்தியா அணி தீவிரம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கிலும் 5 போட்டி கொண்ட டி20 தொடரை 3 --2 என்ற கணக்கிலும் கைப்பற்றியது இந்திய அணி..
தற்போது இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. கடந்த 23-ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1 - -0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்தியா --இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி புனேயில் இன்று பகல்- - இரவாக போட்டியாக நடக்கிறது.இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.
அது போல இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் கடுமையாக போராடுவார்கள். கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தவான், லோகேஷ் ராகுல், கேப்டன் வீராட் கோலி, குர்னால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.
தங்களது முதல் ஆட்டத்திலேயே குர்னால் பாண்ட்யாவும், பிரசித் கிருஷ்ணாவும் புதிய சாதனை படைத்தனர்.சூர்யகுமார் யாதவ் அல்லது ரிஷப்பண்ட் ஆகியோரில் ஒருவர் ஸ்ரேயாஷ் அய்யர் இடத்தில் களம் இறங்கலாம். ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றுவதால், ரிஷப்பண்டுக்கு வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், கேப்டன் மார்கன், பட்லர், மார்க் வுட், ஆதில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் உள்ளனர்.இந்தியா, இங்கிலாந்து இடையே நடக்கும் 102-வது மேட்ச் இதுவாகும். இதுவரை நடந்த 101 போட்டியில் இந்தியா 54-லிலும், இங்கிலாந்து 42-லிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி டை ஆனது. 3 போட்டிக்கு முடிவு இல்லை. இன்றைய போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu