கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க விருப்பமா?
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள், ஹரியானா மாநிலத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 18 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளை கொண்ட தேசிய அளவிலான தமிழ்நாடு அணி வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்யும் பொருட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவிலான தேர்வு போட்டிகள் சென்னையில் நடக்கிறது.
அதன்படி, ஹாக்கி பெண்கள் மட்டும் வருகிற 20-ந் தேதி காலை 7 மணியளவில் சென்னை எக்மோர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம், கால்பந்து பெண்கள் 20-ந் தேதி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், கபடி ஆண்கள் மற்றும் பெண்கள் 24-ந் தேதி, சென்னை நேரு உள் விளையாட்டரங்கம், வாலிபால் போட்டி ஆண்கள் 25-ந் தேதி, வாலிபால் பெண்கள் 26-ந் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் தேர்வு போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க உள்ளவர்கள் 1.1.2003-ந் தேதி அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும். தங்களுடன் தங்களது ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், தற்போது பயிலும் பள்ளி, கல்லூரியில் இருந்து சான்றிதழ், 10-ம் வகுப்பு பள்ளி இறுதியாண்டு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவைகளுடன் மேற்குறிப்பிட்ட இடத்தில் உரிய நாட்களில் வர வேண்டும்.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் பங்கேற்கலாம். இந்த தகவலை நீலகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu