உலகிலேயே மிக உயரமான முருகன் திருமேனி எங்குள்ளது என தெரியுமா?
முத்துமலை முருகன் கோவில்
சேலம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது முத்துமலை முருகன் திருத்தலம். இங்கு பிரமாண்ட முருகனின் திருமேனியை நிறுவத் திட்டமிட்டு 2016-ம் ஆண்டு முதல் திருப்பணி தொடங்கியது.
முருகனின் ஆறுபடை வீடுகளிலில் இருந்து மண்கள் கொண்டுவரப்பட்டு முருகன் சிலை வடிக்கும் பணியானது துவக்கப்பட்டது.இத்திருப்பணி முடிவடைந்து ஏப்ரல் 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
உலகளவில் பார்க்கும்போது முருகனுக்காக அமைக்கப்பட்ட திருமேனிகளில் இதுவரை மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் திருமேனி மிகப் பெரியதாக இருந்தது. அதன் உயரம் 140 அடி.
தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளை மிஞ்சும் விதாமாக, இத்திருத்தலம் சேலத்துக்கு அருகே எழுத்தருளியுள்ளது. சுமார் 146 அடி உயரம் கொண்டு எழுந்தருளியுள்ள முருகனின் சிலை காண்போரை பிரம்மிக்க வைக்கிறது.
பக்தர்களுக்கான சிறப்பம்சமாக முருகனின் திருமுகத்தை அருகில் சென்று பார்க்க நினைப்போர், பாலாபிஷேகம் செய்ய நினைப்போர்களுக்கு முருகன் வேலினுக்கு பின்புறம் லிஃப்ட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முருகன் கையில் அமைந்துள்ள வேலினுள் மற்றொரு வேல் மேலே அமைக்கப்பட்டுள்ளது. பாலாபிஷேகம் செய்வோர் அதில் செய்துகொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த முருகனின் திருமேனி அதைவிட 6 அடி உயரம் பெரியது. அதுமட்டுமல்லாது மலேசியாவில் உள்ள முருகனை வடிவமைத்த தியாகராஜர் ஸ்தபதியே இந்தத் திருக்கோயிலையும் எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமாண்டத் திருமேனியராக முருகப்பெருமான், ஒரு கையில் வேலும் மற்றொறு கையில் ஆசீர்வாதம் செய்வதுபோன்றும் திருக்கோலம் கொண்டுள்ளார். சுமார் 3 கோடி ரூபாய் செலவில், 146 அடி உயரத்தில், வசீகரிக்கும் சிரித்த முகத்துடன், வலது கை அபயஹஸ்த முத்திரையுடன் ஆசீர்வதிப்பது போன்றும், இடது கையில் வேலை பிடித்தும் மணிமகுடம் சூடிய நிலையில் ஆடை அணிகலன்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் முருகன். சிலையின் அருகிலேயே ஒரு லிஃப்ட் அமைக்கப்பட்டுள்ளது.
மலேசிய முருகனுக்கும், இங்குள்ள முருகனுக்கும் பல மாற்றங்கள் உள்ளன. சுவாமியின் திருமேனியில் தங்ககவசம் சாற்றப்பட்டுள்ளது. சுவாமி பஞ்சவர்ண நிறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் வழங்குகிறார். ஒரே நேரத்தில் 5 லட்சம் பேருக்கு தரிசனம் வழங்கும் விதமாக இந்த முருகன் எழுந்தருளியிருக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu