அதிர்ஷ்டம் வேண்டுமா? மஞ்சள் வழிபாடு செய்யுங்கள்..

அதிர்ஷ்டம் வேண்டுமா? மஞ்சள் வழிபாடு செய்யுங்கள்..
X

தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர்.

நாம் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் வேண்டுமானால் மஞ்சள் வைத்து செய்ய வேண்டிய வழிபாடு குறித்து சீனிவாச சித்தர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த ஒரு பொருளாக மஞ்சள் கருதப்படுகிறது. ஆன்மிகத்திலும், நோய் எதிர்ப்பு சக்தியிலும் மஞ்சளுக்கு தனித்தன்மை உண்டு. அப்படிபட்ட மஞ்சளைக் கொண்டு ஆன்மிகத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்து தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் அளித்த விளக்கம் இதோ:

மஞ்சள் அறிவியல் ரீதியாகவும் ஜோதிடம் ரீதியாகவும் ஆரோக்கியம் நிறைந்த, முக்கியமான மற்றும் மங்களகரமான பொருள். அதனால், தான் பலரின் வீடுகளில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வீட்டுவாசலில் மஞ்சள் தண்ணீர் தெளிக்கிறார்கள். மஞ்சள் விஷ்ணு மற்றும் வியாழன் ஆகியோருக்கு மிகவும் பிடித்தமானது. மஞ்சள் வைத்து செய்யக்கூடிய ஜோதிடப் பரிகாரங்களைப் பற்றி பார்க்கலாம்.

எல்லா அதிஷ்டமும் உங்க பக்கம் வர அனைவரின் வீட்டு சமையலறையில் இருக்கும் மசாலா பொருட்களில் ஒன்று மஞ்சள். மருத்துவரீதியாக மஞ்சளில் பல பலன்கள் உள்ளன. அதே நேரத்தில் ஆன்மீக ஐதீகத்தின்படியும் மஞ்சளை சுற்றி பல விஷயங்கள் உள்ளன

மஞ்சள் ஒரு மங்களகரமான பொருள் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இந்து மதத்தின் ஒவ்வொரு வழிபாட்டிலும் (பூஜை, புனஸ்காரம்) மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்திலும் மஞ்சளைப் பயன்படுத்தி பல வகையான பரிகாரங்கள் செய்யப்படுகிறது.

புராணங்களின்படி, மஞ்சள் பகவான் விஷ்ணுவுக்கும், பகவான் குருவுக்கும் விருப்பமான நிறமாக கருதப்படுகிறது. இதை நாம் பல விஷயங்களுக்கு பயன்படுத்துவதால், பல அதிஷ்டங்கள் ஏற்படும். உங்கள் ஜாதகத்தில் வியாழனின் நிலையை வலுப்படுத்த மஞ்சள் ஒரு நல்ல தீர்வு. அந்தவகையில், உங்கள் பக்கம் அதிர்ஷ்ட கதவுகள் திறக்க மஞ்சள் வைத்து செய்யக்கூடிய சில பரிகாரங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

உங்கள் வீட்டில் தொடர்ந்து கஷ்டம் ஏற்பட்டால், உங்கள் வீட்டின் பிரதான வாசலில் மஞ்சள் நீரை தெளிக்கவும். நம்பிக்கையின்படி, இப்படி செய்வது வீட்டில் நேர்மறையை அதிகரிக்கும். மேலும், வீட்டில் உள்ளவர்கள் மன அமைதியைப் பெறுவதோடு, மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்கும்.

உங்கள் வீட்டின் பிரதான வாசலில் மஞ்சள் நீரை தெளிப்பதன் மூலம், வீட்டின் எதிர்மறை சக்திகள் பலவீனமடைவதோடு, வீட்டின் உறுப்பினர்களுக்கு வரும் பேரழிவுகளும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. வழிபாட்டின் போது உங்கள் மணிக்கட்டு அல்லது கழுத்தில் மஞ்சளைப் பூசினால், ஜாதகத்தில் வியாழன் வலுவடைந்து, வாழ்க்கை சிறப்பாகும்.

மத நம்பிக்கைகளின்படி, மஞ்சள் தானம் செய்வது மிகவும் புனிதமானது. இதைச் செய்வதன் மூலம், பல வகையான உடல்நலப் பிரச்சினைகள் சரியாவதுடன், வியாழனின் அருள் முழுமையாக கிடைக்கும். தினமும் வீட்டின் பிரதான வாசலில் மஞ்சள் நீரை தெளித்து வந்தால், வீட்டின் வாஸ்து தோஷங்கள் உட்பட அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது வீட்டின் பிரதான வாசலில் மஞ்சள் நீரை தெளிப்பதன் மூலம் ராகுவின் தோஷங்களும் நீங்கும். வருமானம் பெருகும், வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.

நீங்கள் தொடர்ந்து பணத்தட்டுப்பாட்டால் கஷ்டப்படுகிறீர்கள் என்றால், வீட்டின் பிரதான வாசலில் மஞ்சள் நீரில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு தெளிக்கவும். தண்ணீரை தெளித்ததும் அந்த நாணயத்தை எடுத்து கோயில் உண்டியலில் போடவும். இப்படி தினமும் செய்து வந்தால் விரைவில் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

வியாழன் தோறும் விநாயகப் பெருமானுக்கு ஒரு சிட்டிகை மஞ்சளை வைத்து அர்ச்சனை செய்து வந்தால், திருமண பிரச்னைகள் விலகும். இதுதவிர, விஷ்ணு மற்றும் அன்னை லட்சுமி சிலைகளுக்குப் பின்னால் மஞ்சள் பொடியை மறைத்து வைப்பதன் மூலம், திருமணத்திற்கான தடைகள் நீங்கி வாய்ப்புகள் அதிகரிக்கும். மத நம்பிக்கைகளின்படி, மஞ்சள் மாலையுடன் எந்த மந்திரத்தை உச்சரித்தால் நீங்கள் நம்பமுடியாத அளவுக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என ஶ்ரீ பிரத்தியங்கிராதேவி சித்தர் பீட நிர்வாகி சீனிவாச சித்தர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்