வீரத்துறவி விவேகானந்தரின் பொன்மொழிகள் Vivekananda quotes in Tamil
ஸ்வாமி விவேகானந்தர்
Vivekananda Quotes in Tamil -இந்தியாவின் புகழ்பெற்ற இந்து துறவி சுவாமி விவேகானந்தர் ஜனவரி 12, 1963ஆம் ஆண்டு கல்கத்தா நகரில் பிறந்தார். நரேந்திரநாத் தத்தா என்ற பெயர் தான் விவேகானந்தரின் இயற்பெயர் ஆகும். இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் ஆவார். ஆன்மீக துறவியான சுவாமி விவேகானந்தர் தனது எழுச்சி மிகு சொற்பொழிவுகளால் எண்ணற்ற இளைஞர்களை ஆன்மீகப் பாதையில் ஈர்த்தார். இந்தியா மட்டுமனறி பல வெளிநாடுகளிலும் விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் சிறந்த பொன்மொழிகள் சிலவற்றை இப்பதிவில் உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
கடவுள் இருந்தால் அவனை நாம் காண வேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும். அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். ஆனால் நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. ஆகவே உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்! நீ உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில், எதையும் வெல்.
லட்சியம் உடையவன் ஆயிரம் தவறுகள் செய்தால் அது இல்லாதவன் ஐயாயிரம் தவறுகள் செய்வான் என்பது உறுதி. ஆதலால் லட்சியம் மிகவும் தேவை.
இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், என்னால் முடியாது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், ஏனெனில் நீங்கள் எல்லையற்றவர். எல்லாச் சக்தியும் உங்களிடம் உள்ளது. உங்களால் எதையும் சாதிக்க முடியும்.
ஒரு நாளில் ஒரு முறையாவது உங்களுடன் நீங்களே பேசுங்கள், இல்லையெனில் இந்த உலகில் உள்ள ஒரு சிறந்த நபருடனான சந்திப்பை நீங்கள் தவறவிடக்கூடும்.
மனம் என்பது உடலின் சூட்சுமமான பகுதியாகும். நீங்கள் உங்கள் மனதிலும் வார்த்தைகளிலும் பெரும் பலத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு அறிவு இருந்தால், ஒரு பலவீனமான மனிதரைக் கண்டால், அவரைக் கண்டிக்காதீர்கள். உங்களால் முடிந்தால், அவருடைய நிலைக்குச் சென்று அவருக்கு உதவுங்கள். அவர் வளர வேண்டும்.
தீவிர பிணைப்பு ஏற்பட்டவுடன், ஒரு மனிதன் தன்னையே இழக்கிறான், அவன் இனிமேலும் தனக்குத்தானே எஜமானன் அல்ல, அவன் ஒரு அடிமை.
உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்கள் முன்னோர்களைப் பற்றி வெட்கப்படுவதற்குப் பதிலாக அவர்களைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu