சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷு பூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷு பூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
X

பிரசித்தி பெற்ற சபரிமலை கோவில் நடை, விஷு பூஜைக்காக திறக்கப்பட்டது. 

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற விஷு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கேரளா மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாதங்களில் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பூஜைக்காக கடந்த 10 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மலையாள புத்தாண்டை முன்னிட்டு சபரிமலை கோவிலில் இன்று கோவிலின் பிரதான தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு தலைமையில் விஷு பூஜை மற்றும் கனி தரிசன பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் மாலை அணிந்து இருமுடி கட்டுடன் வந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். மாதாந்திர பூஜைகளுக்கு பின்னர் வரும் 18 ஆம் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.

Tags

Next Story