புரட்டாசி சனிக்கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து; திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை

புரட்டாசி சனிக்கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து; திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை
X

Tirupati Tirumala Temple, Puratasi Saturday, VIP Darshan Cancelled- திருப்பதி, திருமலை கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில், விஐபி தரிசனம் ரத்து செய்ய, தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. (கோப்பு படம்)

Tirupati Tirumala Temple, Puratasi Saturday, VIP Darshan Cancelled- புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், விஐபி தரிசனம் ரத்து செய்வதோடு, அந்த நாட்களில் சிபாரிசு கடிதங்களையும் ஏற்பதில்லை என்ற அதிரடி நடவடிக்கையை, திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ளது.

Tirupati Tirumala Temple, Puratasi Saturday, VIP Darshan Cancelled- திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. தினமும் 80 ஆயிரம் முதல், ஒரு லட்சம் பக்தர்கள் வரை, எழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். பொதுவழி தரிசனத்தில், சில நாட்களில், 30 மணி நேரம் வரையும், சிறப்பு தரிசன வழிகளில், 6 மணி நேரம் வரை காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்கின்றனர். அதுவும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு தினங்களிலும், விடுமுறை தினங்களிலும் கூட்டம் இன்னும் பலமடங்கு அதிகரித்து விடுகிறது.

இந்நிலையில், தற்போது ஆடி மாதம் நடந்து வருகிறது. அடுத்து, ஆவணி மாதத்தை தொடர்ந்து, பெருமாளுக்கு உகந்த விசேஷ மாதமான புரட்டாசி மாதம் துவங்குகிறது. புரட்டாசி மாதத்தில், வழக்கமான நாட்களை விட, திருப்பதி திருமலை கோவிலில், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதுவும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், ஏழுமலையான தரிசிக்க பக்தர்களின் கூட்டம் படையெடுக்கும். இந்நாட்களில், பக்தர்கள் வசதிக்காக விஐபி தரிசனத்தை ரத்து செய்வதோடு, சிபாரிசு கடிதங்களையும் ஏற்பதில்லை என்ற தீர்மானத்தை, திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ளது. ஏனெனில், விஐபி வருகைக்காக, பொதுமக்கள் தரிசனத்தை நிறுத்தி வைக்கும் பட்சத்தில், இன்னும் காத்திருப்பு நேரம் அதிகரித்து, வரிசையில் நிற்கும் பக்தர்கள் சிரமப்பட நேரிடும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதியிலிருந்து 26-ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ம் தேதியிலிருந்து 23-ம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்கூட்டியே தொடங்கியுள்ளனர்.

செப்டம்பர் மாதம் 18-ம் தேதி வருடாந்திர பிரமோற்சவ கொடியேற்ற விழா நடக்கிறது. அதே நாளில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். 22-ம் தேதி கருட சேவை 23-ம் தேதி தங்க தேரோட்டம் 25-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

இதேபோல நவராத்திரி பிரம்மோற்சவ விழா அக்டோபர் மாதம் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ம் தேதி கருட சேவை நடக்கிறது. இதனைத் தொடர்ந்து புரட்டாசி மாதம் வருகிறது. புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்காக வருவது வழக்கமாக உள்ளது.

குறிப்பாக, புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிலில் கூட்டம் அலைமோதும். இரண்டு பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விஐபி தரிசனம் மற்றும் சிபாரிசு கடிதங்களை ஏற்க திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது. அன்றைய நாட்களில் இலவச தரிசனம் மட்டுமே அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கருட சேவை நேற்று இரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்றது. இதனை ஒட்டி திருப்பதியில் பக்தர்கள் குவிந்திருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil