Vinayagar Chaturthi wishes in Tamil கணபதி என்றிட கவலை தீருமே! வாங்க வாழ்த்தலாம்

Vinayagar Chaturthi wishes in Tamil கணபதி என்றிட கவலை தீருமே! வாங்க வாழ்த்தலாம்
X

கோப்புப்படம் 

நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவிக்க இந்த பதிவில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது

இந்துக்களின் மிக முக்கிய கடவுளாக கருதப்படும் முழு முதல் கடவுளான விநாயகரின் பிறந்த நாள் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆவணி 25-ம் தேதி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் மிகவும் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் ஒரு விழாவாக கருதப்படுகிறது.

இந்த விநாயகர் சதுர்த்தி அன்று நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் கூடி. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வீடு அல்லது ஏதாவது ஓரு பொது இடத்தில் வைத்து விநாயகரை வழிபடுவார்கள்.

அந்த சமயத்தில் விநாயகருக்கு மிகவும் பிடித்த அருகம்புல், கொழுக்கட்டை மற்றும் சுண்டல் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபடுவார்கள். பிறகு களிமண்ணில் செய்த இந்த விநாயகரை கடல், ஆறு, குளம் போன்ற இடங்களில் கரைத்து விடுவார்கள்.

இத்தகைய நாளன்று தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தங்களுடைய வாழ்த்துகளை வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்க இந்த பதிவில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


வெற்றி கணபதி புதிய வெற்றிகளை குவித்து, உங்களை வளப்படுத்தட்டும்! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

கணபதி என்றிட கலங்கும் வல்வினை;

கணபதி என்றிட காலனும் கைதொழும்;

கணபதி என்றிட கருமம் ஆதலால்,

கணபதி என்றிட கவலை தீருமே! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!


ஞானம், ஆரோக்கியம், செல்வம் உள்ளிட்ட அனைத்து செல்வத்தையும் அள்ளித் தரும் விநாயகரை விரதம் இருந்து வழிபட்டு வாழ்வின் அனைத்து வளத்தையும் பெற்று சிறப்பாக வாழ்வோம்! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ்க வளமுடன்! இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!


செயல்களின் துவக்கமானவனுக்கு,

தமிழ்கடவுளின் தனயனுக்கு பெற்றோரை உலகமாக்கியவனுக்கு,

விழா எடுப்போர் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

காக்கும் கடவுள், கணேசனை நினை! கவலைகள் அகல அவன் அருள் துணை! வினாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

அருகம்புல் பிரியனே, உனை நினைத்தே வாழ்கிறோம்! எங்களது வினைதீர்த்து அருள் புரிவாய் கணபதியே! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

வேலவனுக்கு முன்னவனே, வேண்டுதலுக்கு உரியவனே, வேளைக்கும் அருள் புரிபவனே, உனை வேண்டி நின்று வாழ்கிறோம்! எம் வினை தீர்த்து, வேண்டுதல்களுக்கு விடைதருவாய்! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

உன்னை நாடி வரும்போது, உள்ளத்தை சுத்தமாக்கி வாழ்க்கையை நல்லதாக்கி வாழ்ந்திட வையப்பா, வையகம் வாழ்த்தும் விநாயகா! இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

வினையெல்லாம் தீர்த்து வைப்பாய் விநாயகா! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!


முழு முதற் கடவுள் கணபதி உங்களுக்கு எல்லா வளமும் தரட்டும்! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!

விநாயகர் அருளால்

உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும்.

மலர்ந்த சந்தோஷம் அவர் அருளால் தொடரட்டும்...!

ஞானம், ஆரோக்கியம், செல்வம்

உள்ளிட்ட அனைத்து செல்வத்தையும் அள்ளித்தரும்

விநாயகரை விரதம் இருந்து வழிபட்டு

நாம் நம் வாழ்வின் அனைத்து வளத்தையும் பெற்று

சிறப்பாக வாழ்வோம்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.!

வேலனுக்கு முன்னவனே உன்னை வணங்காது வேலை தொடங்குவார் இல்லை.. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

Tags

Next Story