நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போடும் அகிலா

நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போடும் அகிலா
X
ஷவர் தண்ணீர் மூலம் குளித்து வந்த யானைக்கு புத்துணர்வு கிடைக்க இந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது.

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கார்த்திகை கோபுரத்தின் அருகே உள்ள நாச்சியார் தோட்டத்தில் 3.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் . கோயில் யானை அகிலா புத்துணர்வுடன் இருப்பதற்காக இந்த நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் செய்தது.

முன்னதாக கோயில் யானை அகிலா கோயில் முன்புள்ள தெப்பக் குளத்தின் அருகே அமைக்கப்பட்ட ஷவர் தண்ணீர் மூலம் குளித்து வந்தது. தற்போது இன்னும் கூடுதல் புத்துணர்வுடன் அகிலா யானை இருப்பதற்காக இந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. மேலும் யானைக்கு என தனியாக நடை பயிற்சியுடன் கூடிய தரை தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் வளாகத்தில் 4 1/2 ஏக்கர் அளவில் பசும் தீவனங்கள் பயிரிடப்பட்டு யானைக்கு தற்போது வழங்கி வருகின்றனர். நீச்சல் குளத்தில் அகிலா யானையை பாகன் ஜம்புநாதன் குளிப்பாட்டுவார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!