12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்

Indraiya Raasi Palan In Tamil- மேஷம் ராசிபலன் (வியாழக்கிழமை, ஜூலை 21, 2022)
உங்களை அறியாமல் உங்கள் கருத்துகள் வேறொருவரின் சென்டிமெண்டை காயப்படுத்தலாம். வெளியூரில் இருக்கும் உங்கள் நிலத்தை இன்று நல்ல விலையில் விற்கலாம், இது உங்களுக்கு லாபம் தரும். உங்கள் அழகும் பர்சனாலிட்டியும் சில புதிய நண்பர்களை உருவாக்க உதவியாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றியும் அங்கீகாரமும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று நீங்கள் தனிமையில் நேரத்தை செலவிட விரும்புகிறீர்கள். அவ்வாறு செய்வதும் உங்களுக்கு நன்மை பயக்கும்..
ரிஷபம் ராசிபலன் (வியாழக்கிழமை, ஜூலை 21, 2022)
டென்சன்களில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புகழும் அங்கீகாரமும் கிடைக்கும் நாள். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும். நீங்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போவீர்கள்.
மிதுனம் ராசிபலன் (வியாழக்கிழமை, ஜூலை 21, 2022)
உடல் ஆரோக்கியத்தைக் கவனியுங்கள். உங்கள் பணம் எங்கு செலவிடப்படுகிறது என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் வரும் காலங்களில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். வேலையில் நல்ல வாய்ப்புகளைத் தேடி மேற்கொள்ளும் பயணம் பாசிடிவான பலன்களைத் தரும். நேர்காணலின் போது நீங்கள் கட்டுப்பாடாக இருந்து உங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.. இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் தனிச்சிறப்பான நாளாக இருக்கும்.
கடகம் ராசிபலன் (வியாழக்கிழமை, ஜூலை 21, 2022)
இன்றைக்கு ரிலாக்ஸ் செய்ய அதிக நேரம் கிடைக்கும். முதலீடுகளில் இன்று நிதி இழப்பை சந்திக்க நேரிடும் வேலை ஊதியத்துடன் தொடர்புடையவர்கள் இன்று துறையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். வணிகர்களுக்கு நாள் சாதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது உங்கள் துணை உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட கூடும்.
சிம்மம் ராசிபலன் (வியாழக்கிழமை, ஜூலை 21, 2022)
சிக்கலான சூழ்நிலையை சந்திக்கும்போது, உங்களின் மன உறுதிக்கு இன்று பரிசு கிடைக்கும். உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கும்போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது. சந்திரன் நிலையால் இன்று உங்கள் பணம் தெயற்ற பொருட்களில் செலவாக்கக்கூடும். ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் கலந்து பேசுவது உங்களுக்கு நல்ல ஐடியாக்களையும் பிளான்களையும் தரும். ஒவ்வொரு பணியையும் அவ்வப்போது முடித்து விடுங்கள்.
கன்னி ராசிபலன் (வியாழக்கிழமை, ஜூலை 21, 2022)
பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும். அதிக சக்தியும் அதீத உற்சாகமும் சாதகமான ரிசல்ட்களைக் தரும். துணிச்சலான முயற்சிகள் நல்ல முடிவுகளை தரும். இல்லையெனில் அது நேரத்தை வீணடிக்கும். வேலை அழுத்தத்தால் உங்கள் திருமண வாழ்க்கை சில காலமாக பாதித்து வருகிறது. ஆனல் இன்று அந்த பாதிப்பு நீங்கும்.
துலாம் ராசிபலன் (வியாழக்கிழமை, ஜூலை 21, 2022)
உங்கள் சகோதர சகோதரிகள் யாரேனும் உங்களிடம் பணம் கடனாக கேட்க கூடும்,. வீட்டு சூழ்நிலையில் சாதகமான சில மாற்றங்களை செய்வீர்கள். உங்களை மகிழ்விக்கும் செயல்களை உங்கள் அன்புக்குரியவர் செய்வார். உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு துணையை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய நிறைய பிரச்சினைகள் இருக்கும். உங்களுக்கு உங்கள் வாழ்க்கை துணைக்கும் இன்று ஒரு இனிமையான தகவல் வந்து சேரும்.
விருச்சிகம் ராசிபலன் (வியாழக்கிழமை, ஜூலை 21, 2022)
சில பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனால் எதிர்பார்க்கும் முடிவு கிடைப்பதற்காக கடினமாக உழையுங்கள். உறவினர்களும் நெருக்கடி நேரத்தில் உதவி செய்வார்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.. நீங்கள் துறையில் சிறப்பாகச் செய்ய விரும்பினால், உங்கள் வேலையில் நவீனத்துவத்தைக் கொண்டுவர முயற்சிக்கவும். இதனுடன், புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
தனுசு ராசிபலன் (வியாழக்கிழமை, ஜூலை 21, 2022)
அளவுக்கு அதிகமான பயணம் சோர்வை ஏற்படுத்தும். உங்கள் மனைவியுடன் சேர்ந்து, நீங்கள் எதிர்காலத்திற்கான பொருளாதார திட்டம் வெற்றிகரமாக இருக்கும். மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும். சீனியர் லெவலில் உள்ளவர்களுடன் சில எதிர்ப்புகள் ஏற்பட்டாலும், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது முக்கியம். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும்.
மகரம் ராசிபலன் (வியாழக்கிழமை, ஜூலை 21, 2022)
உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள், குறிப்பாக ரத்த அழுத்த நோயாளிகள். உங்கள் பிள்ளைகளுடன் ஆரோக்கியமான உறவை ஊக்குவித்திடுங்கள். கடந்த காலத்தை மறந்து, பிரகாசமான மகிழ்ச்சியான எதிர்காலத்தை திட்டமிடுங்கள், உங்கள் முயற்சிக்குப் பலன் கிடைக்கும். நிலுவையில் உள்ள திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும். திருமண வாழ்வில் இன்று மகிழ்ச்சியான நாள்.
கும்பம் ராசிபலன் (வியாழக்கிழமை, ஜூலை 21, 2022)
வெளிப்படையான பயமற்ற கருத்துகள் உங்கள் நண்பரின் தற்பெருமையை காயப்படுத்தும். பிரச்சினைகளை மறந்து குடும்பத்தினருடன் நேரத்தை நன்கு செலவிடுவீர்கள். சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கையாளும் விதம் உங்களுடன் பணிபுரியும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம், ஆனால் உங்களிடம் சொல்ல மாட்டார்கள். எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்காவிட்டால், அதை ஆய்வு செய்து பிளான்களை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை செய்யவும் நேரம் இருக்கும்.
மீனம் ராசிபலன் (வியாழக்கிழமை, ஜூலை 21, 2022)
பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருந்தால், உங்களின் எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகள் நிறைவேறும். வேலையில் மற்றவர்களை கையாளும் போது அறிவும் பொறுமையும், எச்சரிக்கையும் தேவை. திருமண வாழ்வை இனிமையாக்கை நீங்கள் இது வரை எடுத்த முயற்சிகள் யாவும் இன்று உங்களுக்கு பலன் தரும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu