12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்

12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
X
Today Rasi Palan In Tamil Horoscope- திங்கள்கிழமை, ஆகஸ்ட் 1 இன்றைய ராசிபலனில் 12 ராசிக்காரர்களுக்கான ராசிபலனை பார்க்கலாம்

Today Rasi Palan In Tamil Horoscope- மேஷம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 1, 2022)

உடல் ஆரோக்கியத்தைக் கவனித்து ஒழுங்குபடுத்துங்கள். இன்று உங்கள் பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தினருடன் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதன் மூலம் உங்கள் லட்சியங்களை எளிதில் அடைவீர்கள். ஒரு சமயத்தில் ஒரு செயல் என முக்கிய மாற்றங்களைச் செய்தால், நிச்சயமாக வெற்றி உங்களுக்கே. நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.

ரிஷபம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 1, 2022)

உங்களின் கடுமையான நடத்தையால் மனைவியுடன் உறவு பாதிக்கப்படலாம். அல்பமாக எதையாவது செய்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை யோசியுங்கள். நீண்ட காலமாக நிதி நெருக்கடியைச் சந்தித்தவர்கள், இன்று எங்கிருந்தும் பணம் பெறலாம், இது வாழ்க்கையின் பல சிக்கல்களை நீக்கும். புதிய திட்டம் மற்றும் செலவுகளை தள்ளிப் போடுங்கள். நீங்கள் இன்று கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும்.

மிதுனம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 1, 2022)

மற்றவர்களின் வெற்றிக்காக அவர்களைப் பாராட்டி அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். வீட்டின் எந்தவொரு உறுப்பினரின் நடத்தை காரணமாக, நீங்கள் தொந்தரவு செய்யப்படலாம். நீங்கள் அவர்களிடம் பேச வேண்டும். பயணம் உங்கள் பிசினஸ் தொடர்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம்.

கடகம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 1, 2022)

நோயின் பாதிப்பில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஏதாவது வேலையில் ஈடுபடுங்கள். ஏனெனில் நோயைப் பற்றி அதிகம் பேசினால், அது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று தொழிலுடன் தொடர்புடையவர்கள் நிதி ரீதியாக பயனடைய வாய்ப்புள்ளது. தவறான நேரத்தில் தவறான விஷயத்தை சொல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் துணை செய்யும் ஒரு விஷயம் இன்று உங்கள் நாளை மறக்க முடியாததாக்கும்.

சிம்மம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 1, 2022)

இன்று பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்பவர்கள் தங்கள் பணத்தை இழக்க நேரிடும். நீங்கள் சரியான நேரத்தில் விழிப்புடன் இருந்தால் அது உங்களுக்கு நல்லது. நீங்கள் அதிகம் கஷ்டப்படாமல் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க பொருத்தமான நாள். தகுதியுள்ள அலுவலர்களுக்கு பதவி உயர்வு அல்லது பணப் பயன் கிடைக்கும். இன்று நீங்கள் உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிட போதுமான நேரம் கிடைக்கும். இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.

கன்னி ராசிபலன் (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 1, 2022)

பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும். இளைஞர்களை உள்ளடக்கிய செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ள நல்ல சமயம். நிலுவையில் உள்ள திட்டங்களும் பிளான்களும் இறுதி வடிவத்துக்கு வரும். உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் திருப்தி தரும்.

துலாம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 1, 2022)

உங்களின் கெட்ட பழக்கங்கள் உங்களுக்கே கேடாக அமையும். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள முடிவுகள் இறுதி செய்யப்படும். புதிய முயற்சிகளுக்கான பிளான்கள் முறைப்படுத்தப்படும். தனிமையில் நேரத்தை செலவிடுவது நல்லதுதான் என்றாலும், உங்கள் மனதில் ஏதேனும் நடக்கிறது என்றால், விலகி இருப்பது வருத்தம் அதிகரிக்கும். எனவே அனுபவம் வாய்ந்த ஒருவரிடம் பேசுவது நல்லது..

விருச்சிகம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 1, 2022)

சில பின்னடைவுகள் ஏற்படலாம். மனம் உடைந்துவிட வேண்டாம். உறவினர்களும் நெருக்கடி நேரத்தில் உதவி செய்வார்கள். கமிஷன்கள், டிவிடெண்ட்கள் அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். எதிர்கால திட்டங்கள் பற்றிய ஒரு தெளிவு கிடைக்கும். இன்று நீங்கள் வாழ்க்கையின் பல முக்கியமான விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் உட்கார்ந்து பேசலாம்..

தனுசு ராசிபலன் (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 1, 2022)

நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். உங்களின் பெரிய பார்ட்டிக்கு எல்லோரையும் அழைத்திடுங்கள் - உங்கள் குரூப்பிற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக் கூடிய கூடுதல் சக்தி உங்களுக்கு கிடைக்கும். தவறான தகவல் தொடர்பு அல்லது தகவல் உங்கள் நாளை டல்லாக்கும். உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள்.

மகரம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 1, 2022)

உற்சாகம் தரும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டு ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் கொடுத்த பணத்தை நீங்கள் திரும்பப் பெற முடியும். வீட்டில் குடும்பத்தினரிடம் இணக்கத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவும் கோபத்தை நீங்கள் வென்றாக வேண்டும். வெற்றி பெறும் வரையில் உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும்.

கும்பம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 1, 2022)

புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்களின் பிடிவாதமான குணத்தால் வீட்டில் உள்ளவர்களும் நெருங்கிய நண்பர்களும் வருத்தப்படுவார்கள். உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் வெளிநாட்டு வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் இன்று விரும்பிய முடிவுகளைப் பெறுவார்கள் உங்கள் வாழ்க்கையில் இனி முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை மீண்டும் சொல்வது உங்களுக்கு சரியானதல்ல. இதைச் செய்வதால் உங்கள் நேரம் வீணாகும்.

மீனம் ராசிபலன் (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 1, 2022)

இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று உங்கள் கெட்ட பழக்கங்கள் உங்கள் துணையை உங்களிடம் கோபப்பட வைக்கும். சந்திரன் நிலை பார்க்கும்போது, இன்று உங்களுக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்கும் என்று கூறலாம், ஆனால் அப்போதும் கூட நீங்கள் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்ய முடியாது. குடும்பத்தில் தகராறுகள் திருமண வாழ்வைப் பாதிக்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story