வேண்டிய வரம் தரும் பண்ணாரி மாரியம்மனை தரிசிக்கலாம் வாங்க...!

Tirupur news, Tirupur news today- பண்ணாரி மாரியம்மனை தரிசித்து, அம்மனின் அருளை பெறுவோம்!
Tirupur news, Tirupur news today- பண்ணாரி மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்புவாய்ந்த கோவிலாகும். தமிழக மக்கள் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மக்களும், அதிகளவில் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அமாவாசை தினங்களில், இந்த கோவிலில், பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது.
அமைவிடம்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 209 ல் பண்ணாரி என்னும் ஊரில், இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 361 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
பண்ணாரி மாரியம்மனின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்தக் காலத்தில் வண்ணார் சமுதாயத்தைச் சார்ந்த கணவன் மனைவியும் சலவைத் துணி துவைப்பதற்காக ஒரு பெரிய மலை கீழ் அமைந்து இருந்த ஆற்றில் துணி சலவை செய்வதற்காக எடுத்து சென்றனர். அப்போது அந்த பெண், நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.பின் சலவை துணி துவைக்கும் வேளையில், கடுமையான மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
பின் அந்தக் கணவனோ தான் சலவைக்கு கொண்டு வந்த சேலைகளை கொண்டு நால்புறமும் கட்டி தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.இரு பெண் குழந்தைகள் பிறந்ததாக புராண வரலாறும் செவி வழி வரலாறுமாக உள்ளது.பின் ஒரு குழந்தையை அவர் தூக்கியதாகவும் மற்றொரு குழந்தையை இருவராலும் தூக்க முடியவில்லை.பின் அவர்கள் அந்த குழந்தையை அருகில் இருந்த தாழியில் வைத்துவிட்டு, மூவரும் சென்று நடந்ததை ஊர் கவுண்டரிடம் முறையிட்டுள்ளனர்.
பின் அவர்களுடன் அந்த குழந்தை இருக்குமிடம் சென்று அந்த குழந்தையே தூக்க முடியவில்லை.பின் இரும்பு கடப்பாரை கொண்டு அந்த தாழியை தூக்க முற்பட்டனர்.அப்போது அந்த குழந்தையின் வலது மார்பில் கடப்பாரை பட்டு இரத்தம் கசிந்துள்ளது.(அதை இன்றளவும் நாம் பூசையில் உன்னிப்பாக கவனித்தால் அம்மனின் வலது மார்பில் சிறு காயங்கள் தென்படும்).அந்த தாழியின் உள்ளையே இருந்த குழந்தை காலையில் சென்று பார்க்கும் பொழுது பெண் குழந்தை வடிவாகவே அம்மனாக எழுந்தருளி இருந்தது.அம்மனே கனவில் வந்து தனக்கு திருவிழா நடத்த வேண்டும் என்றும் கூறியதாக வரலாறு கூறுகிறது.
பின் ஊர் திருவிழா அன்று அனைவரும் கொங்கு நாட்டு வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர்.அப்போது அந்த சலவைத் தொழிலாளி பெண் தனது குடும்ப வறுமை காரணமாக பச்சைமாவுக்கு பதில் புளியங்கொட்டையைக் கொண்டு இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி கொண்டு சென்றிருந்தாள்.அந்த புளிமாவுக்காக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தது. அது இன்றளவும் அம்மனின் அமைப்பு அப்படியே உள்ளது.இது இன்றளவும் வண்ணார் சமுதாய கடவுளாக, வண்ணார் பெண்ணாக காணப்படுகிறது,மேலும் கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
பண்ணாரி அம்மன் கோவில் மேல்முகப்பு
ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் தீ மிதி (பூக்குழி) திருவிழா. பண்ணாரியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 209 ல் அமைந்துள்ளது.
பண்ணாரி அம்மன் கோவிலிலிருந்து திம்பம் மலைப்பாதை ஆரம்பம். இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும்.
பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேஸ்வர சுவாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கு கோவை, ஈரோடு, சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu