308வது வயதில் அடியெடுத்து வைத்த திருப்பதி லட்டு

308வது வயதில் அடியெடுத்து வைத்த திருப்பதி லட்டு
X

Tirupati Temple, Lattu Prasadham, Lattu is 308 years old- திருப்பதி லட்டுக்கு வயது 308 (கோப்பு படங்கள்)

திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு வயது, 308 ஆகிறது.

Tirupati Temple, Lattu Prasadham, Lattu is 308 years old-பழநி என்றால், பஞ்சாமிர்தம், திருப்பதி என்றால், லட்டு என்பது ஆண்டாண்டு காலமாக சொல்லப்படும் ஒரு பொன்மொழி. பழனி சென்று வந்தவர்களிடம் பஞ்சாமிர்தம் கேட்பதும், திருப்பதி சென்று வந்தவர்களிடம் லட்டு பிரசாதம் கேட்பதும், வழக்கமாக இருந்து வருகிறது. திருப்பதி லட்டுக்கு உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பிரசாத லட்டு, திருப்பதியில் மட்டுமே கிடைக்கும். வேறு எங்கும் கிடைக்காது. அதுவே, திருப்பதி லட்டுவை மக்கள் அதிகமாக விரும்ப முக்கிய காரணம். அதுமட்டுமின்றி, திருப்பதி திருமலை ஏழுமலையானின் பிரசாதமாக இருப்பதால், திருப்பதி லட்டுக்கு எப்போதுமே, தனிச்சிறப்பு கிடைக்கிறது.


இந்நிலையில், நடப்பாண்டில் திருப்பதி லட்டு 307 ஆண்டுகளை கடந்து, 308 வது ஆண்டை கொண்டாடத் துவங்கியுள்ளது.

கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் பக்தர்கள் மிகவும் விரும்பி வாங்கி செல்லும் லட்டு பிரசாதம் திருப்பதி கோவிலில் 307 ஆண்டுகளை கடந்து இன்று முதல் 308வது ஆண்டாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் பக்தர்கள் மிகவும் விரும்பி வாங்கி செல்லும் பிரசாதம் திருப்பதி லட்டு பிரசாதம் ஆகும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்வதற்காக சுமார் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக தேவஸ்தானத்தில் ஒரு தனியாக ஒரு துறையே செயல்படுகிறது.

அந்த துறை பக்தர்களுக்கு தடங்கல் இல்லாமல் பிரசாதம் கிடைக்கும் வகையில் தினமும் சுமார்3, 50,000 லட்டுக்களை தயார் செய்கிறது. ஏழுமலையான் கோவிலில் மூன்று வகையான லட்டுக்கள் தயார் செய்யப்படுகின்றன.


அவற்றில் ஒன்று பக்தர்களுக்கு கவுண்டர்களில் விற்பனை செய்யப்படும் 175கிராம் எடையுள்ள லட்டு. மற்றொன்று சுமார் 1750 கிராம் எடையில் தயார் செய்யப்படும் பெரிய லட்டு. மூன்றாவது லட்டு புரோக்தம் லட்டு என்று அழைக்கப்படும். இந்த லட்டு சுவாமிக்கு நைவேத்தியம் செய்வதற்காக தயார் செய்யப்படுகிறது.

300 ஆண்டுகளுக்கு முன் ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக பூந்தி வழங்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. அதனைத் தொடர்ந்து 1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் பூந்திக்கு பதிலாக, லட்டு பிரசாதம் வழங்கும் நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்பட்டு இப்போது வரை பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் காப்புரிமை வழங்கப்பட்டது. எனவே இந்தியாவில் யாரும் திருப்பதிலட்டு என்ற பெயரில் லட்டு உற்பத்தி செய்யவோ விற்பனை செய்யவோ இயலாது.


லட்டு தயாரிப்பு

சுமார் 175 கிராம் எடையுடைய 5100 லட்டுக்களை தயார் செய்ய 185 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 160 கிலோ சுத்தமான நெய்,30 கிலோ முந்திரி பருப்பு, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கல்கண்டு, நாலு கிலோ ஏலக்காய் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

இத்தனை சிறப்பு மிகுந்த திருப்பதி லட்டு, ஏழுமலையானின் அருட்பிரசாதமாக பக்தர்களுக்கு கிடைப்பதே பெரும்பாக்கியமாக கருதப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!