திருச்செந்துாரின் கடலோரத்தில்.... செந்தில்நாதன் அரசாங்கம்..... பக்தர்களே ....படிங்க...பரவசமாகுங்க...

திருச்செந்துாரின் கடலோரத்தில்....  செந்தில்நாதன் அரசாங்கம்.....  பக்தர்களே ....படிங்க...பரவசமாகுங்க...
X
Tiruchendur Temple History in Tamil - தமிழக கோயில்களில் திருச்செந்துார் கோயிலானது வெகு சிறப்பு மிக்கது.கடற்கரையோர பகுதியில் அமைந்த முருகன் கோயிலுக்கு தினந்தோறும்ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

tiruchendur temple history in tamil


திருச்செந்துாரில் கடலோரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் (பைல்படம்)

tiruchendur temple history in tamil

தமிழகத்தில் அக்கால மன்னர்கள் பல இடங்களில் ஆன்மீகத்தை பரப்பும் வகையில் பல தொன்மைவாய்ந்த கோயில்களை கலைநயத்துடன் கட்டியுள்ளனர். அதுவும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள கலையம்சத்தினை பார்க்கும்போது எப்படி கட்டினார்கள் அக்காலத்தில் என வியப்படையும் வகையில் அவர்களது கட்டிடக்கலையானது இன்றளவில் சான்றாக உள்ளது.

பல தொன்மை வாய்ந்த கட்டிடஙகளில் அதாவது கோயில்களின் பிரகாரத்தின் மேற்புறம் ஒரே நீள கல்லினைக்கொண்டு சுற்றுபிரகாரத்தினை வடிவமைத்துள்ளனர்.இது எப்படி சாத்தியமானது அக்காலத்தில்.... இக்காலத்தில் க்ரேன் உதவியுடன் எவ்வளவு உயரத்திற்கும் கொண்டு செல்லும் வசதிவாய்ப்புகளைப் பெற்றுள்ளோம் நாம்.ஆனால் அறிவியல் வளராத அக்காலத்தில் எப்படி இது சாத்தியமானது? நமக்கே வியப்பைத்தரும் வகையில் ஆன்மீகத்தின் செயல்பாடுகள் உள்ளது?

அந்த வகையில் திருச்செந்துாரில் கடலின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள முருகன்கோயில் சிறப்புகளைப் பற்றி காண்போம். இக்கோயிலானது அறுபடை வீடுகளின் இரண்டாம் படை வீடாக கருதப்படுகிறது. துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துார் என்ற இடத்தில் அமைந்துள்ளது.பழங்கால இலக்கியங்களில் சேயோன் என அழைக்கப்படுகிறது.

இக்கோயிலானது சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மன்னார் வளைகுடா அருகே அமைக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்திலும் சங்ககாலஇலக்கியங்களிலும் இக்கோயில் பற்றி சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமை வாய்ந்த கோயிலாக இக்கோயில் கருதப்படுகிறது. முருகனுக்கு கடற்கரை ஓரத்தில் அமைந்த கோயில் இதுவாகும். அக்காலத்தில் இக்கோயில் அமைந்த இடமானது திருச்சீரலை வாய் என அழைக்கப்பட்டதுண்டு.

கோயில் தல வரலாறு

சிவபெருமானிடம் தேவர்கள் அனைவரும் சென்று தங்களுக்கு அடிக்கடி தொந்தரவு அளித்துவரும் சூரபத்மனை அழிக்கும்படி வேண்டுகோள்விடுத்தனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து 6 பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகன் தோன்றி பின் சிவபெருமானின் கட்டளையை ஏற்று சூரபத்மனை அழிக்க வந்தார். அதே நேரத்தில் வியாழ பகவானான குரு இவ்விடத்தில் முருகனை வணங்க வந்திருந்து தவமிருந்தார். இதற்காக முருகப்பெருமான்இவ்விடத்தில் தங்கி அசுரர்களைப் பற்றி நன்கு அறிந்துகொண்டார். பின் தன் படைத்தளபதியான வீரபாகுவை சூரபத்மனிடம் துாதுஅனுப்பினார் முருகன். அவன் கேட்காததால் பின் தன் படைகளுடன்சென்று அவனை முருகன் வதம் செய்தார்.

பின்னர் அங்கு வேண்டுகோளோடு தவமிருந்த குருபகவானான வியாழன் முருகனிடம் இதே இடத்தில் எழுந்தருளுமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று அதன் படி முருகன் இவ்விடத்தில் தங்கியதாகவும் வரலாறுகள் தெரிவிக்கிறது. பின்பு விஸ்வகர்மாவைக் கொண்டு வியாழ பகவான் முருகனுக்குகோயில் எழுப்பினார். சூரபத்மனை வெற்றி கொண்டதால் இவரை செயந்திநாதர் என அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இப்பெயரே மருவி செந்தில்நாதர் ஆனது. . தலமும் "திருஜெயந்திபுரம்' என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.

தமிழகத்தில் உள்ளஅறுபடை வீடுகளில் 5 கோயில்கள் மலைக்கோயில்களாக அமைந்துள்ளன. ஒரே ஒரு அறுபடை வீடு கோயில் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ளது. அதுதான் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயிலின் கோபுரமானது 9 தளங்களைக் கொண்டது. மேலும் இதன் உயரம் 157 அடியாகும். சூரனை ஆட்கொண்ட வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முருகப்பெருமான் சிவபூஜை செய்தார். இதனால் இக்கோலத்தில்தான் முருகப்பெருமான் வலக்கையில் தாமரை மலருடன் காட்சி தருகிறார். . தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஓர் லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்குத் தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்குப் பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.



சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்பிரமணிய ஸ்வாமி (பைல்படம்)

முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. தேவர்கள் மார்கழி மாதத்தில்தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.முருகனை வெளியில்இருந்து தரிசிக்கும்போது பஞ்சலிஙக் தரிசனம் செய்ய முடியாது. உள்ளே மூலவர் முருகரின் இடப்புறம் உள்ள சிறு வழி வழியாக உள்ளே சென்று சுற்றி வலப்புறம் வந்த பின்தான் பாதாள பஞ்சலிங்கத்தினை தரிசனம் செய்யஇயலும்.

ராஜகோபுரம்

திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. சுப்பிரமணியர் இத்தலத்தில் கடலைப்பார்த்தபடி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். எல்லா கோபுரங்களுமே கிழக்கு நோக்கிதான் இருக்கும்.ஆனால் இங்கு கிழக்கு திசையில் கடல் இருப்பதால் ராஜகோபுரம் மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால் அடைக்கப்பட்டே காணப்படும். சஷ்டி விழாவின்போது சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணத்தன்று மட்டும் நள்ளிரவில் திறக்கப்படும் அப்போதும் பக்தர்களுக்கு இவ்வழியே செல்ல அனுமதி கிடையாது.

இக்கோயிலானது காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்தே இருக்கும்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். மாப்பிள்ளை சாமியை வணங்குபவர்களுக்கு மணக்கோல பாக்கியம் கிடைக்கும். திருமண தடை உள்ளவர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை வியாழக்கிழமைகளில் தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும்.

திருவிழா

தமிழகத்தினைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் முருகப்பெருமானுக்கு அனைத்து கோயில்களிலும் விசேஷங்கள் நடக்கும். வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை கந்தசஷ்டி முருகத்தலங்களில் சஷ்டி விழா 6 நாட்களே நடக்கும். சில கோயில்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால் திருச்செந்துாரைப்பொறுத்தவரை சஷ்டி விரதமானது முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த ஐந்து நாட்கள் சுப்பிரமணிய சுவாமி 5 நாட்கள் திருமண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil