பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்த சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
பக்தர்கள் வெள்ளத்தில் நடந்த சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம் மாரியம்மன்கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். சமயபுரம் மாரியம்மன் கோவில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் சித்திரை தேர் திருவிழா மிகவும் முக்கியமானதாகும். இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலின் ஆதி கோவில் எனப்படும் இனாம் சமயபுரம் கோவிலுக்கு அம்பாள் சென்று வந்தார். இந்த நிலையில் சித்திரை பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு ஓம்சக்தி, பராசக்தி என்ற கோஷத்ததுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். 4 ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வலம் வந்த திருத்தேரில் மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி தன்னை நாடி வந்த தன் பக்தர்களுக்கு கருணை முகத்துடன் அருள்பாலித்தார்.
காலை 11.10 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் பகல் 2.20 மணிக்கு நிலைக்குமுடிவுற்று தேர் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு வழிநெடுகிலும் பல கிலோ மீட்டர் துாரம் தண்ணீர்பந்தல்கள் அமைத்து நீர், மோர், பானகம், பழரசங்கள், தர்பூசணி பழங்கள், இளநீர் வழங்கினர். மேலும், நுாற்றுக்கணக்கான இடங்களில் பந்தல் அமைத்தும், வேன்களில் வைத்தும் அன்னதானம் நடந்தது.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தலைமையில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu