பழனிக்கு அடுத்தபடியாக வருமானம் தரக்கூடிய கோவில்-மிக பிரபலமான கோவில்.
பழனிக்கு அடுத்தபடியாக வருமானம் தரக்கூடிய கோவில்..தமிழகத்தின் மிக பிரபலமான கோவில்..கேட்பவர்களுக்கு கேட்டதை விட அதிகமாக தரும் அம்மன் கோவில்..சமயபுரம் மாரியம்மன் கோவில். இத்தனை பெருமைக்குரிய சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் நிலை பார்த்தால் கண்ணில் ரத்தம் வரும்..தெப்பக்குளம் அருகிலேயே அதாவது கோவில் நுழைவு வாயிலில் உங்களை வரவேற்பது பிரியாணி கடை..
பால் குடம் முதல் அலகு போடுதல் என இந்த தெப்பக்குளத்திலிருந்து ஆரம்பிக்கும் பக்தர்கள் கோவிலில் நேர்த்திகடனை முடிப்பார்கள்.அந்த தெப்பக்குளம் படிகட்டுகளில் இன்று மீன் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகின்றது..தெப்பக்குளம் குப்பைகுழி போல காணப்படுகின்றது..கேட்க வேண்டியவர்கள் வருமானத்தில் மட்டும் குறியாக உள்ளனர்..சமயபுரம் கோவில் தெப்பக்குளம் சீர்படுத்தப்படவேண்டும்..அந்த படிகட்டுகளில் உள்ள மீன்வியாபார கடைகள் அகற்றப்பட வேண்டும்...நடக்குமா?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu