சபரிமலைக்கு தனி போஸ்டல் பின்கோடு வழங்கிய தபால் துறை
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்தும் அதிகப்படியான பக்தர்கள் விரதம் இருந்து தரிசிக்க வருகின்றனர்.
தமிழகம் மற்றும் கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள பக்தர்கள் கார்த்திகை மாதம் விரதத்தை தொடங்கி மண்டல பூஜையின் போது மகரஜோதி காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதேபோல் 10 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளும், 50 வயதுக்கு மேலே உள்ள பெண்களும் மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பெண்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெண்கள் யாரும் வழிபட செல்லவில்லை.
இந்நிலையில் திருவாங்கூர் தேவசம் போர்டு சபரிமலையில் 10 வயதிற்கு கீழே உள்ள பெண் குழந்தைகளும் 50 வயதுக்கு மேலே உள்ள பெண்களும் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்க முடியும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய இயலாதவர்கள் சபரிமலை கோவிலுக்கு வேண்டுதலுக்காக கடிதம் எழுதுவது வழக்கம். இதற்காக இங்கு போஸ்ட் ஆபீஸ் ஒன்று உள்ளது. அதற்கு தனியாக போஸ்டல் பின்கோடு அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய தபால் துறை.
சபரிமலை சன்னிதானத்தில் மாளிகைப்புறம் கோயில் அருகே சபரிமலை போஸ்ட் ஆபீஸ் செயல்படுகிறது. மண்டல, மகரவிளக்கு காலத்தில் மட்டுமே இது செயல்படும். இதற்கு பக்தர்கள் அனுப்பும் கடிதங்கள் பெரும்பாலும் வேண்டுதல் தொடர்பாக இருக்கும்.
சிலர் தங்கள் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டி எழுதுவர். சிலர் தங்கள் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழை அனுப்புவர். இதுபோல காணிக்கையை மணியார்டர் ஆக அனுப்புவர். இவற்றை அய்யப்பன் முன் வைத்து விட்டு நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவர். கடந்த 1963ல் இங்கு போஸ்ட் ஆபீஸ் செயல்பட துவங்கியது.
இதைத் தொடர்ந்து அய்யப்பன் படம் மற்றும் 18 படிகளுடன் கூடிய முத்திரை அறிமுகமானது. இந்த முத்திரை பதித்த கடிதம் தங்கள் வீடுகளுக்கு வருவதை பக்தர்கள் புண்ணியமாக கருதுகின்றனர். சபரிமலைக்கு 689713 என்ற பின்கோடும் உண்டு. நம் நாட்டில் சபரிமலை அய்யப்பனுக்கும் ஜனாதிபதிக்கும் மட்டுமே தனி பின்கோடு உள்ளது.
இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் பக்தர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu