முஹம்மது நபிக்கு நபித்துவம் வழங்கப்பட்டு மதீனாவிற்கு குடிபெயர்ந்து சென்ற நாள்
மதீனா
இதே ஜூலை 16, 622 - முஹம்மது நபி நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவனின உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கர்ருடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்து சென்றார். என்று அவருடைய வரலாறு சொல்கிறது.
மக்காவில் எதிரிகளின் கொடுமை அதிகமானதால் முகம்மது நபி மதீனாவிற்கு பயணம் செல்ல நாடினார்கள். இறைவனின் உத்தரவு கிடைத்ததும் முகம்மது நபி தமது தோழரான அபூபக்கருடன் மதினா நகருக்கு ரகசியமாக இரவு வேளையில் பயணம் செய்தார். இருவரும் மூன்று நாட்கள் குகையில் தங்கினார்கள். பின்னர் இருவரும் மதீனா நகருக்குள் நுழைந்தார்கள். இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட கி.பி. 622 ம் வருடம் இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது.
மதீனா நகரில் அனைத்து மக்களும் தமது வீட்டிலேயே முகம்மது நபி தங்க வேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால் முகம்மது நபி தமது ஒட்டகம் சென்று அமர்ந்த அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் தமது தங்குமிடத்தை அமைத்தார்.
முகம்மது நபி தமது தங்குமிடத்திற்கு அருகில் தொழுகைக்கு பள்ளிவாசல் கட்ட தீர்மானித்தார். அந்த நிலம் இரண்டு அனாதைகளுக்குச் சொந்தமாக இருந்தது. அவர்களிடமிருந்து அதை விலைக்கு வாங்கி கட்டிடப் பணியைத் தொடங்கினார். அப்பணியில் பங்கெடுக்கும் முகமாக அவரும் கல், மண் சுமந்தார். அந்த பள்ளிவாசல் அல்-மஸ்ஜித் அந்-நபவி (முகம்மது நபி கட்டிய பள்ளிவாசல்) என்று அழைக்கப்படுகிறது
முஹம்மது நபி வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதிய இப்னு இஷாக், இந்த நிகழ்வை ஓர் ஆன்மீக அனுபவமாக குறிப்பிடுகிறார். முஹம்மது நபியின் போதனைகளுக்கு மக்கா நகரில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக அவர் மக்காவை விட்டு வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது. மக்கா எதிரிகள் பல நிலைகளிலும் முகம்மது நபிக்கு தொல்லை கொடுத்தார்கள். அவர்களை சமாளிக்க முகம்மது நபி பல போர்களில் ஈடுபட்டார்.
பதுருப் போர், உஹத் யுத்தம், கைபர் போர், அகழ்ப்போர், தபூக் போர், ஹுனைன் போர் உள்ளிட்ட பல போர்களில் முகம்மது நபி ஈடுபட்டார்மக்காவில் இருந்து மதீனா வந்த பின்னர் பத்து வருடங்கள் கழித்து முகம்மது நபி தமது இறுதி ஹஜ் கடமையை மக்காவிற்கு சென்று நிறைவேற்றியப் பின்னர் மீண்டும் மதீனா திரும்பினார். அங்கு தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.
தமது கடைசி ஹஜ் யாத்திரைக்கு சில மாதங்களுக்கு பிறகு, முகம்மது அவர்கள் காய்ச்சல், தலைவலி, மற்றும் பலவீனத்தால் பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டார்..அவர் கி.பி.632 ஆம் வருடம் ஜூன் 8 ஆம் தேதியன்று, மதினாவில், 62 அல்லது 63 வது வயதில், அவரது மனைவி ஆயிஷாவின் வீட்டில் மரணமடைந்தார். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu