குருபெயர்ச்சி: திட்டை குரு ஸ்தலத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

குருபெயர்ச்சி: திட்டை குரு ஸ்தலத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
X

குருபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு குரு பரிகார தலமான தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

தஞ்சை அருகே குரு ஸ்தலமான திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்கிறார். அதன்படி குருபகவான் இன்று அதிகாலை 4.16 மணிக்கு, கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதனை முன்னிட்டு குரு பரிகார தலமான

தஞ்சாவூர் அருகேயுள்ள தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலயத்தில், தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் மங்கள குருவிற்கு நவதானியங்கள், பழங்கள், பட்டு வஸ்திரங்கள் கொண்டு சிறப்பு யாகபூஜைகள் செய்யப்பட்டன. மேலும் குருவிற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட குருவிற்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குரு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ள 24ம் தேதி ஒரு நாள் மட்டும் லட்சார்ச்சனையும், 29ம் தேதி மற்றும் 30ம் தேதியில் சிறப்பு பரிகார ஹோமம் நடக்கிறது.

Tags

Next Story