/* */

ஆடி வெள்ளியையொட்டி தமிழக அம்மன் கோயில்களில் விசேஷ பூஜை

ஆடிவெள்ளியையொட்டிதமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களில் நாளை அபிஷேகம், ஆராதனை, உள்ளிட்ட விசேஷ பூஜைகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

HIGHLIGHTS

ஆடி வெள்ளியையொட்டி  தமிழக   அம்மன் கோயில்களில்  விசேஷ பூஜை
X

நாளை ஆடிவெள்ளியையொட்டி தமிழகத்தில்

அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைக்கான ஏற்பாடு


தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களில் ஆடிவெள்ளியையொட்டி அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழகத்திலுள்ள கோயில்கள் அனைத்துமே ஆண்டுதோறும் ஆடி என்றாலே களை கட்டும். ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வார்கள். இதனை விவசாய மாதம் என்று கூட சொல்லலாம். ஆடி மாதத்தில் பெரும்பாலும் திருமணங்கள் நடத்தப்படுவதும் இல்லை. இதனால் மாநிலத்திலுள்ள நகரங்கள் முதல் குக்கிராமம் வரை உள்ள அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவது வழக்கம். ஊர்கூடி தேரிழுப்பதைப்போல் ஊர் மக்கள் அனைவரும் இந்த திருவிழாவுக்காக குழுக்கள் அமைத்து அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்யப்படுவது மரபு. அதாவது ஒவ்வொரு வீட்டிற்கும் வரியினை விதித்து அந்த பணத்தில் திருவிழா ஏற்பாடுகளை அக்குழு தலைவர் மேற்பார்வையில் நடக்கும்.

களை கட்டும் திருவிழா

ஆடிமாதத்தில் நடக்கும் திருவிழாக்கள் அனைத்தும் சிறப்பாக செய்யப்படுவதுண்டு. அதாவது குறைந்த பட்சம் 10 நாட்களுக்கு மேல் நடத்துவதுண்டு. தினந்தோறும் அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் என கட்டளைதாரர்கள் சார்பில் நடத்தப்படும். இறுதியாக சத்தாபரணம் வரை சிறப்பாக செய்யப்படுவதுண்டு. பல ஊர்களில் இத்திருவிழாவிற்காக தற்காலிக கடைகள் குறைந்த பட்சம் நாட்களுக்கு நடக்கும். குடும்பத்தோடு சென்று மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் மாவிளக்கு எடுத்து பிரார்த்தனை செய்வது வழக்கம். மேலும் மாலை நேரங்களில் சிறப்பு பட்டிமன்றம், வழக்காடு மன்றம், மற்றும் இன்னிசைக் கச்சேரி என விழாக்குழு சார்பில் நடக்கும். இரவில் வானவேடிக்கையும் நடப்பதுண்டு. ஊர் முழுவதும் மின்விளக்கு ஜொலிக்கும். உற்றார் உறவினர் புடை சூழ திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பு விருந்தில் கலந்துகொள்வர். ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர்கள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் நடப்பதோடும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கும். எனவே தான் ஆடி மாதம் என்றாலே மாநிலத்திலுள்ள அனைத்து அம்மன் கோயில்களும் களைகட்டும்.உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களிலிருந்தும் இக்கோயில்களுக்கு வந்து தரிசனம் செய்வர்.

Updated On: 21 July 2022 1:47 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  7. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  9. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?