ஆன்லைனில் ஜாதக பொருத்தம் எப்படி பாக்கலாம்?

திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி?
How to See Jathagam Porutham in Tamil
திருமணம் குறித்த பேச்சு தொடங்கியதும் முதலில் ஆண் மற்றும் பேரன் இருவர் ஜாதகங்களில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. பொதுவாக ஜாதக பொருத்தம் பார்க்கும்பொழுது பெண் ஜாதகத்தை முதன்மையாக வைத்து ஆண் ஜாதகங்களை பொருத்தி பார்க்க வேண்டும்.
இந்த பதிவில் ஜாதகம் பொருத்தம் பார்ப்பது எப்படி என்று பார்ப்போம்.
ஜாதக பொருத்தம் என்று பார்க்கும்பொழுது முக்கியமாக 10 திருமண பொருத்தங்கள் பார்க்கப்படும் அவை தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம், இராசி அதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகும்.
தினப் பொருத்தம்
பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கூட்ட தொகையை 9 ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை பொருத்தம் உண்டு.
கணப் பொருத்தம்
கண பொருத்தத்தில் 3 வகையான அமைப்புகள் உள்ளன. அதன் பொருத்தம் விவரத்தினை பார்ப்போம்
- பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக இருந்தால் நலம்.
- பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்
- பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம்
- பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது
- பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.
தேவ கணம்
அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி
மனித கணம்
பரணி, ரோகிணி, திருவாதிரை பூரம், பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி
ராட்சஷ கணம்
கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.
மகேந்திரப் பொருத்தம்
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை வரிசையாக எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 எண்கள் வருமாயின் உத்தமம். மகேந்திர பொருத்தம் இல்லையெனில் விருக்ஷ பொருத்தம் பார்த்து பொருந்தினால் போதும்.
ஸ்திரி தீர்க்கம்
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 13 க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.
யோனிப் பொருத்தம்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம் ஆகும். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் பொருந்தாது. இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும். அவை பின் வருமாறு
அசுவினி – ஆண் குதிரை
பரணி – ஆண் யானை
கார்த்திகை – பெண் ஆடு
ரோகிணி – ஆண் நாகம்
மிருகசீரிஷம் – பெண் சாரை
திருவாதிரை – ஆண் நாய்
புனர்பூசம் – பெண் பூனை
பூசம் – ஆண் ஆடு
ஆயில்யம் – ஆண் பூனை
மகம் – ஆண் எலி
பூரம் – பெண் எலி
உத்தரம் – எருது
அஸ்தம் – பெண் எருமை
சித்திரை – ஆண் புலி
சுவாதி – ஆண் எருமை
விசாகம் – பெண் புலி
அனுஷம் – பெண் மான்
கேட்டை – கலைமான்
மூலம் – பெண் நாய்
பூராடம் – ஆண் குரங்கு
உத்திராடம் – மலட்டு பசு
திருவோணம் – பெண் குரங்கு
அவிட்டம் – பெண் சிங்கம்
சதயம் – பெண் குதிரை
பூரட்டாதி – ஆண் சிங்கம்
உத்திரட்டாதி – பாற்பசு
ரேவதி – பெண் யானை
குறிப்பு: இவற்றில்
பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி
ஆகியவை ஜென்ம பகை என்பதால் சேராது.
ராசிப் பொருத்தம்
பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்
6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.
8-வது ராசி ஆகாது.
7-வது ராசியானால் சுபம்.
அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.
1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.
பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும்.
ராசி அதிபதி
இராசி அதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.
ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.
ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்
ஒருவருக்கு பகை, ஒருவருக்கு நட்பானால் மத்திமம்
ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை
இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.
வசியப் பொருத்தம்
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இருப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைத்தல் நல்லது. பெரும்பாலும் வசியபொருத்தம் அமைவது இயலாது. வசியபொருத்தம் அமையாதவர்கள் ராசி பொருத்தம் ராசி அதிபதி பொருத்தம் பார்த்து அது பொருந்தினால் போதுமானது.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வசியபொருத்தம் உள்ளவை மற்றவை பொருத்தம் இல்லை என அர்த்தம்.
ரஜ்ஜு பொருத்தம்
ஆணின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது. இரச்சு ஐந்து வகைப்படும்.
சிரோரஜ்ஜு
மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்
கண்டரஜ்ஜு
ரோகிணி, அஸ்தம், திருவோணம் – ஆரோஹனம்
திருவாதிரை, சுவாதி, சதயம் – அவரோஹனம்
உதாரரஜ்ஜு
கார்த்திகை, உத்தரம், உத்ராடம் – ஆரோஹனம்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – அவரோஹனம்
ஊருரஜ்ஜு
பரணி, பூரம், பூராடம் – ஆரோஹனம்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி – அவரோஹனம்
பாதரஜ்ஜு
அசுவினி, மகம், மூலம் – ஆரோஹனம்
ஆயில்யம், கேட்டை, ரேவதி – அவரோஹனம்
பொருத்த விபரம்
பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தால் பொருந்தாது.
ஒரே ரஜ்ஜுவில் ஆரோகணம், அவரோகணம் என்று இரு பிரிவுகள் உண்டு. ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தாலும், ஆரோகணம், அவரோகணம் வேறாக இருந்தால் செய்யலாம் பொருத்தம் உண்டு.
வேதைப் பொருத்தம்
தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் அறிந்து அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.
அசுவினி – கேட்டை
பரணி – அனுஷம்
கார்த்திகை – விசாகம்
ரோகிணி – சுவாதி
திருவாதிரை – திருவோணம்
புனர் பூசம் – உத்ராடம்
பூசம் – பூராடம்
ஆயில்யம் – மூலம்
மகம் – ரேவதி
பூரம் – உத்ரட்டாதி
உத்திரம் – உத்ரட்டாதி
அஸ்தம் – சதயம்
ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. 11ஆவதாக கூறப்பட்டுள்ள நாடிப்பொருத்தம் முக்கிய 10 பொருத்தங்களில் இடம்பெறவில்லை இருப்பினும் சில இடங்களில் இப்பொருத்தம் பார்க்கப்படுவதால் தரப்பட்டுள்ளது
நாடிப் பொருத்தம்
பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும்.
பார்சுவநாடி (அ) வாத நாடி
அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி (அ) பித்த நாடி
பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி
சமான நாடி (அ) சிலேத்தும நாடி
கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- Tamil Jathagam Porutham online
- jathagam porutham parpathu eppadi
- jathagam porutham parka
- tamil online jathagam porutham
- hosur jathagam porutham
- how to see jathagam porutham in tamil
- online jathagam porutham tamil
- jathaka porutham tamil online
- tamil jathaga porutham
- porutham parpathu eppadi
- tamil jathagam porutham
- online jathagam porutham in tamil
- jathaga poruththam tamil
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu