முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் எப்படி வந்தது?

முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் எப்படி வந்தது?
X
"குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்" என சொல்லக் கேட்டிருப்போம். நாம் காவடி எடுப்பதற்கும் இரண்டு குன்றுகள் தான் காரணமாக இருந்திருக்கின்றது.

முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் எப்படி வந்தது?

முருகன், தமிழ் கடவுள்களுள் ஒருவர் ஆவார். முருகனை வழிபடுதலில் முக்கியமானது 'காவடி" எடுத்தல் ஆகும். அந்த காவடி எடுக்கும் பழக்கம் எங்கிருந்து வந்திருக்கும் என்பதைப் பற்றிப் பார்போம்.

"குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்" என்று அனைவரும் சொல்லக் கேட்டிருப்போம். நாம் காவடி எடுப்பதற்கும் இரண்டு குன்றுகள் தான் காரணமாக இருந்திருக்கின்றது.

அகஸ்திய முனிவருக்கு 'இடும்பன்" என்ற ஒரு சீடர் இருந்தார். ஒருமுறை இடும்பனை அழைத்த அகஸ்தியர், கயிலைக்குச் சென்று அங்கு முருகனின் மலையான கந்தமலையிலுள்ள சிவசக்தி சொரூபமான 'சிவகிரி", 'சந்திரகிரி" என்னும் இரண்டு மலைகள் வழிப்பாட்டிற்கு தேவைப்படுகிறது கொண்டு வா என்றார். குருவின் கட்டளையை ஏற்று இடும்பன், கந்தமலைக்குப் புறப்படுகிறார். இருமலைகளையும் சுமந்து வருவதற்கு வசதியாக காவடியாகக் கட்டி, அதைத் தன் தோளில் தாங்கிக் கொண்டு புறப்படுகிறார்.

இதனைக் கண்ட முருகப் பெருமானோ, தனது விளையாட்டைத் தொடங்குகிறார். இரண்டு மலைகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்துவிட வேண்டும் என்ற முடிவுக்கும் வருகிறார் முருகன். மேலும் இடும்பனுக்கும் அருள் புரிய வேண்டும் என்றும் எண்ணினார். இந்த இரு மலைகளையும் தாங்கி வரும் இடும்பனுக்கோ நடுவில் வழி தெரியாமல் நின்ற போது ஓர் அரசனைப் போல் தோற்றம் எடுத்து வந்த முருகன், இடும்பனை ஆவின்குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுக்குமாறு கூறுகிறார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். உடனே, அவனை மலையில் இருந்து இறங்குமாறு கூற, அச்சிறுவனோ, இந்த மலை எனக்கே சொந்தம் என்கிறான்.

கோபம் கொண்ட இடும்பன் சிறுவனைத் தாக்க முயல, அப்படியே சாய்ந்து விழுகிறான் இடும்பன். இதனை அறிந்த அகஸ்தியர், முருகனிடம் வேண்ட இடும்பனுக்கு ஆசி வழங்குகிறார் முருகன். இடும்பனைத் தன் காவல் தெய்வமாகவும் நியமனம் செய்கிறார். அன்று முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் உருவானது. ஆகையால் வேண்டுதல் நிறைவேறிய பின் முருகனுக்கு காவடி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!