கிருஷ்ணஜெயந்தியையொட்டி உறியடி கண்டருளினார் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

கிருஷ்ணஜெயந்தியையொட்டி உறியடி கண்டருளினார் ஸ்ரீரங்கம் நம்பெருமாள்
X

உறியடி கண்டருள எழுந்தருளினார் நம்பெருமாள்.

கிருஷ்ணஜெயந்தியையொட்டி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் இன்று உறியடி கண்டருளினார்.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உறியடி உற்சவம் கண்டருளினார்.

நாடு முழுவதும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ணஜெயந்தி விழா கடந்த 6 ம்தேதி கொண்டாடப்பட்டது. ஆனால் முக்கிய வைணவ ஸ்தலங்களில் எல்லாம் கிருஷ்ணஜெயந்தி விழா செப்டம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது எனவும் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் ஆலயத்தில் ஸ்ரீ ஜெயந்தி என்ற பெயரில் இரண்டு நாட்கள் கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை 10 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.10.30 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 11.30 மணி முதல் 2.30மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார்.


இரண்டாம் நாளான இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணன் அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். காலை 9 மணிக்கு சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி ஸ்ரீ கிருஷ்ணன் சன்னதி வந்தடைந்தார்.


இதனை தொடர்ந்து பிற்பகல் 3மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் உறியடி கண்டருள திருச்சிவிகையில் புறப்பட்டார். மாலை 4 மணிக்கு யாதவ உறியடி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி உறியடி கண்டருளினார். இதனை தொடர்ந்து சித்திரை வீதிகளில் நம்பெருமாள் உறியடி கண்டருளினார்.அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு 9 மணிக்கு நம்பெருமாள் மீண்டும் மூலஸ்தானம் சென்றடைந்தார். கிருஷ்ணஜெயந்தியையொட்டி இன்று மூலவர் விஸ்வரூப சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது. சேவை நேரத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!