வைகுண்ட ஏகாதசி நாளையா? ஜனவரி 13ம் தேதியா? குழப்பத்துக்கு இதோ விடை

வைகுண்ட ஏகாதசி நாளையா? ஜனவரி 13ம் தேதியா? குழப்பத்துக்கு இதோ விடை
X
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நாளையும், மற்ற வைணவ ஆலயங்களில் ஜனவரி 13ம் தேதியும் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுவது குறித்த், பக்தர்களிடையே சில குழப்பங்கள் நிலவுகிறது. அதற்கு காரணம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசியும், பெரும்பாலான மற்ற வைணவ ஆலயங்களில் ஜனவரி 13ம் தேதியும் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுவதுதான்.
இந்த முறை ஏன், இப்படி இரு வேறு தினக்களில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிறது. இதுபற்றி வைணவ மூத்த ஆச்சார்யார்கள் கூறியதாவது: இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஆண்டு தோறும், மார்கழி வளர்பிறை ஏகாதசியன்று இந்த வைபவம் நடக்கும். இது, இந்த ஆண்டு மார்கழி மாதத்தின் கடைசியில் வருகிறது.
ஆனால், தை மாதம் புனர்பூச நடத்திரத்தில் ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழா நடத்த வேண்டுமென்றும் என்பது காலங்காலமாக உள்ள நியதி இந்தாண்டு தேர்த்திருவிழா, தை மாதம் 4,ம் தேதி அதாவது வரும் ஜனவரி 17,ல் வருகிறது. எனவே, வைகுண்ட ஏகாதசியை, ஒருமாதம் முன்னதாக, கார்த்திகை மாதத்தில் ஸ்ரீரங்கத்தில் நடத்த வேண்டியுள்ளது.

அதன் அடிப்படையில் தான், ஸ்ரீரங்கத்தில் இம்முறை வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை மாதத்தில் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதுபோன்ற மாற்றம், 19, ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதுண்டு. என்வே, ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் நாளை சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. மற்ற வைணவ ஆலயங்களில், ஜனவரி 13ம் தேதியே வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படும். பக்தர்கள் இவ்விரு நாட்களிலும் பெருமாளை சேவித்து அருள் பெறலாம் என்று அவர்கள் கூறினர்.

Tags

Next Story