அறிவியல் பார்வையில் ஆன்மீகம்: வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? -என்.கே.மென்டிஸ்

அறிவியல் பார்வையில் ஆன்மீகம்: வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? -என்.கே.மென்டிஸ்
X
பூமிக்கு 25 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள எம்13 என்னும் நட்சத்திர கூட்டங்களுக்கு அனுப்பிய அலை கற்றைகளுக்கு 27 ஆண்டுகளுக்கு பின்னர் பதில் கிடைத்தது.

இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், ஆய்வாளருமான என்.கே.மென்டிஸ் எழுதும் சிறப்புத் தொடரின் இரண்டாம் பகுதி. எமது முந்தைய பதிவில் பாதாளலோகம் பற்றி ஆராய்ந்திருந்தோம். அந்தத் தொடரின் மூலம் பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கும் என்று நம்புகின்றேன்.

Om crop circle in England

இந்தத் தொடரில் பிரபஞ்சத்தையும் தாண்டி சனாதனதர்மத்தை பின்பற்றுபவர்கள் இருக்கின்றார்கள் என்பதற்கான மிக வலுவான ஆதாரங்களை முன்வைக்க இருக்கின்றேன். இந்தஆதாரங்கள் தற்கால விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள் என்பது முக்கிய அம்சமாகும்.

இவை சனாதனதர்மம் என்னும் இந்து மதத்தின் சின்னங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானிகள் வேற்று கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் போது இந்துமதக் கடவுள்களை வேற்று கிரகவாசிகள் என்ற கோணத்தில் ஆராய்ந்துள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆங்கில அலை வரிசைகளிலும் இது தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

"பொய்யகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்"

வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் - கையலகக்

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு

முன் தோன்றிய மூத்தகுடி"

இது புறப்பொருள் வெண்பா மாலை இலக்கண நூலில் காணப்படுகின்ற ஒருபாடலாகும். இது ஒருசங்ககால பாடல் என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை உற்றுநோக்கும் போது கல் தோன்றி அது இயற்கையான காரணங்களினால் மண்ணாக மாறுவதற்கு முன்பு தமிழ் மொழியும், ஆதிதமிழ் நாகரீகமும் தோன்றியதாக கூறப்படுகிறது.

ஆதித் தமிழர்கள் முதல் நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள் என இந்தபாடல் நிறுவி நிற்கிறது. மேலும் இதனை விஞ்ஞானரீதியாக நோக்குவோமேயானால் கல்லாகப்பட்டது பலவித இயற்கை காரணிகளால் மண்ணாக மாறுகின்றது என கூறப்பட்டுள்ளது. அது எவ்வாறு மண் தோன்றுவதற்கு முன்பு தமிழ் தோன்றியது என எவரேனும் கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு விஞ்ஞானரீதியான, வானியல் ரீதியான விடைகளை வழங்கவேண்டும். உதாரணமாக தமிழ் மொழியும், ஆதிதமிழ் நாகரீகமும் எமது பூமியில் தோன்றுவதற்கு முன்பு வேற்று கிரகங்களில் தோன்றி வளர்ச்சியடைந்திருக்கலாம் என்ற கருத்தை நாம் முன்வைக்கலாம்.


பல கிரகங்கள் உயிர் வாழ்க்கைக்கு உகந்ததாக இருப்பதை நாசா நிறுவனம் உறுதிசெய்துள்ளது. இதேவேளை வேற்றுகிரகவாசிகள் பூமிக்குவந்து செல்வதையும் வானியல் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்கின்றனர். எனவே, பூமியில் தோன்றுவதற்கு முன்பு தமிழர் நாகரீகமும் வேற்றுகிரகங்களில் தோன்றியிருக்க அதிகளவிலான வாய்ப்புக்கள் உண்டு.

ஆன்மீகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்வோமேயானால் அவர்கள் ஆதிகாலம் முதல் சனாதன தர்மத்தில் உள்ளடங்கும் சைவசமயத்தை பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைமேலும் விளக்குவதற்கு பயிர் வட்டம் எனப்படும் குரோப் சேக்கில் குறித்து நான் கூற விரும்புகின்றேன். பயிர் வட்டங்கள் எனப்படுபவை பெரும் ஏக்கர் கணக்கில் விளைவிக்கப்படுகின்ற பயிர் செய்கைகளை வரைகின்ற அல்லது உருவாக்குகின்ற பாரிய சித்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிர்வட்டங்கள் தொடர்பான வரலாற்றை எடுத்து நோக்குவோமேயானால் இங்கிலாந்தில் வைல்ட்சையர் என்னும் இடத்தில் விமானி ஒருவர் இலகுரக விமானமொன்றில் பயணித்துள்ளார். அங்குள்ள வயல்வெளிக்குமேல் பறந்து மீண்டும் 10 நிமிட இடைவெளியில் வருகை தருகையில் வயல் வெளியில் அவர் கண்டகாட்சி அவரை பிரமிக்க வைத்தது.


அங்கு மிக பிரமாண்டமாக சித்திரமொன்று வரையப்பட்டு இருந்தது. இதனை ஆராய்ந்த விஞ்ஞானிகள் வேற்றுகிரகவாசிகளால் இது வரையப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து மேலும் பல பயிர் வட்டங்கள் அப்பகுதியில் தோன்றஆரம்பித்தன.

இதனை உறுதிப்படுத்துவதற்காக கேமராக்களுடன் அப்பகுதியில் மறைந்திருந்த இளைஞர்கள் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் அனைவரையும் ஆச்சியரியத்திற்கு உள்ளாக்கின.

ஓளி வட்டமான பந்துகள் தோன்றி அவற்றை ஒரு சில நொடிகளில் வரைவதையும், பயிர்வட்டங்கள் உருவாக்கப்படுவதையும் மக்கள் நேரடியாக கண்டனர்.


இதனையடுத்து விஞ்ஞானிகள் உட்பட அனைவரும் இந்த பயிர்வட்டங்கள் வேற்று கிரகவாசிகள் பூமிக்கு விடுக்கின்ற செய்திகள் என நம்பத் தொடங்கினார்கள். இவை பலகணித சமன்பாடுகள் உட்பட சிக்கலான சமன்பாடுகளை உருவாக்கும் வகையிலும், தீர்க்கும் வகையிலும் அமைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இவை பூமிக்கு வேற்றுகிரகவாசிகளால் விடுக்கப்படுகின்ற செய்திகள் என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியதுடன், இங்கிலாந்தின் மற்றுமொரு இடத்தில் உருவாக்கப்பட்ட மற்றுமொரு பயிர்வட்டம் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவதாக அமைந்தது.


வானியல் ஆராய்ச்சியாளரான கார்ல் சேகன் என்பவர் அமெரிக்க வானியல் துறையில் பிரபலமானவர். இவர் பூமியில் காணப்படுகின்ற மனிதர்களின் எண்ணிக்கை, அவர்கள் டி.என்.ஏ உட்பட பல தகவல்களை வரை படமாக்கி பின்னர் அதை ரேடியோ அலை கற்றைகளாக வடிவமைத்து பூமிக்கு மிக அருகில் உள்ள அதாவது பூமிக்கு 25 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள எம் 13 என்னும் நட்சத்திர கூட்டங்களுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த நட்சத்திர கூட்டங்களில் வேற்று கிரகவாசிகள் இருந்தால் இவரது அலை கற்றைக்கான பதில் வழங்கப்படும் என்று நம்பினார். இவர் அனுப்பிய அலை கற்றைக்கு 27 ஆண்டுகளின் பின்னர் பதில் வழங்கப்படும் வகையில் இங்கிலாந்தில் சில்போல்டெனில் ஒரு பயிர்வட்டம் உருவாகியது.

இது கார்ல் சேகன் அனுப்பிய பயிர் வட்டத்துடன் ஒப்பிட்டிருந்ததுடன் அந்த வேற்று கிரகவாசிகள் தமது இருப்பு தொடர்பான விபரங்களை கார்ல் சேகன் அனுப்பி, சித்திர அலைகற்றைக்கு பதில் வழங்கும் வகையில் இருந்தது.

குறிப்பாக பூமியில் மனிதர்கள் எந்தளவு உள்ளார்கள் என்று அவர் அனுப்பிய தகவல்களுக்கு பதில் வழங்கி வேற்று கிரகவாசிகள் தமது உயிரின இருப்பு பூமியில் மனிதர்களின் இருப்பைவிட அதிகம் என்று தெரிவித்திருந்ததுடன் மேலும் பல தகவல்களை வெளியிட்டிருந்தனர். இது தொடர்பாக நாம் அதிகளவில் ஆராயாமல் நமது இந்து மதத்தின் ஆணிவேராக கருதப்படுகின்ற ஓம் வடிவில் ஏற்படுத்தப்பட்ட பயிர்வட்டம் தொடர்பாக கவனம் செலுத்துவோம்.


இங்கிலாந்தின் சில்பெரிஹில் பகுதியில் 2007ம் ஆண்டில் ஓம் வடிவ பயிர் வட்டமொன்று வேற்று கிரகவாசிகளால் உருவாக்கப்பட்டது. இது 07.07.2007 என்னும் தேதியில் உருவாக்கப்பட்டிருந்ததுடன் இதன் எண்கள் 3 ஏழு இலக்கங்கள் வரும் தேதியில் உருவாக்கப்பட்டிருந்தது.

1333 அடிநீளமும், 500 அடி அகலமும் கொண்டதாக இந்தபயிர்வட்டம் உருவாக்கப்பட்டது. ஒளிவட்ட பந்துகள் இந்த பயிர்வட்டத்தை உருவாக்கியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பயிர்வட்டங்கள் வேற்றுக் கிரகவாசிகளால் உருவாக்கப்படுகின்றன என வானியல் விஞ்ஞானிகள் அடித்து கூறுகின்ற நிலையில் ஓம் வடிவமானது இந்துக்களால் சமய ரீதியாக வணங்கப்படுகின்ற ஒரு வடிவமென்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, வேற்றுக் கிரகவாசிகளும் சனாதனதர்மத்தை பின்பற்றுகின்றார்கள் என்று எம்மால் கூறமுடியும். இது சனாதன தர்மத்திற்கு வலுச்சேர்க்கும் ஒருவிசயமாகும். இதனுடன் நாம் விஞ்ஞானிகள்,வேற்றுக் கிரக ஆய்வுகளில் இந்து கடவுள்களையும், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச புராணங்களையும் ஒப்பீடு செய்வதை குறிப்பிடலாம்.


மேலும், கூறப்போனால் அமெரிக்காவில் ஒரிகன் பாலைவனத்தில் 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்டு இருந்த பெரியளவிலான சித்திரமொன்றை பற்றி கூறலாம். இராணுவ வீரர் ஒருவிமானத்தில் பயணித்ததை பல கோடுகளில் இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பை கண்டுள்ளார். இது வெளி உலகிற்கு தெரிய வருகின்றபோது அது ஒரு ஹெக்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட ஸ்ரீ ஹரிசக்கரம் என விஞ்ஞானிகளால் அறியப்பட்டது.

இது 4 கால் பந்தாட்ட மைதானங்கள் அளவை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீஹரிசக்கரமானது, சனாதனதர்மத்தை பின்பற்றுகின்ற இந்துக்களால் புனிதமான சக்கரமாக போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

இன்றும் பல இந்து ஆலயங்களில் இந்த ஸ்ரீஹரிசக்கரம் காணப்படுகிறது. ஓம் என்னும் ஒலிக்கு அலைகற்றைகள் மூலம் வடிவம் கொடுக்கப்படுகின்ற போது அது ஸ்ரீஹரிசக்கர வடிவத்தை பெறுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஒலியானது மனிதனின் பிண்டத்தில் உள்ள ஆற்றலுக்கும் அண்டத்தில் உள்ள ஆற்றலுக்கும் பாலமாகவிளங்கும் 3ம் கண்ணை திறக்கவைக்கக் கூடியது என கண்டறியப்பட்டது. இந்த ஸ்ரீஹரிசக்கரத்தை நிச்சயமாக மனிதர்களால் 4 கால் பந்தாட்ட மைதானமளவில் உருவாக்கியிருக்க முடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அவ்வாறெனில் இதனை உருவாக்கியது யார்? சனாதன தர்மத்தை பின்பற்றுகின்ற வேற்றுக் கிரகவாசிகள் இதனை உருவாக்கியுள்ளார்கள் என்பது உறுதியாகிறது. எனவே, நாம் இந்துமதத்தின் பெருமையை அறிவியல் ரீதியாக உணரவேண்டும். …. (மேலும் பலதகவல்கள் வெளிவரும்.)

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!