தர்ப்பணம் செய்யுங்க..... மஹாளய அமாவாசை செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்கிறது பழமொழி
Amavasai Tamil-
படவிளக்கம்: தன் முன்னோர்களை வழிபட கடலில் நீராடும் பொதுமக்கள் (கோப்பு படம்)
மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.மஹாயளய அமாவாசை என்பது ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடியது ஆகும். மஹாளய பட்சம் என்று 15 நாட்கள் சிறப்பாக முன்னோர்களை வழிபடுவதோடு கடைசி நாளான மஹாளய அமாவாசையன்று தர்ப்பணத்தோடு நிறைவுறும்.
மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று இறந்த பெற்றோர்கள் மற்றும் நம் பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைப்பதற்காக நாம் தர்ப்பணம் செய்து வருகிறோம். ஆனால் இந்த மஹாளய பட்சம் துவங்கி விட்டாலோ நம் முன்னோர்கள் அனைவரும் நம்முடன் இருப்பது போன்ற ஐதீகத்தின் காரணமாக அவர்களுடைய திதியில் தானம், தர்ப்பணம் உள்ளிட்டவைகளை செய்வது வழக்கமாகி வருகிறது. அதுவும் இதனை செய்வதால் என்ன நன்மை என கேட்டால் நம் சந்ததியினருக்கு எதிர்காலம் சிறப்பாக அமைவதோடு பித்ரு தோஷம் நம்மை நெருங்காது என்று கூட சொல்லலாம்.
மாதா மாதம் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் வருடத்தில் மூன்று நாட்களில் செய்யலாம். அதாவது ஆடி மற்றும் தை அமாவாசை தினத்தன்று நீராடி காவிரிக்கரையோரம் பலரும் தத்தம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
அதேபோன்று புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை தான் இருப்பதிலேயே சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினத்தி்லும் நம்முன்னோர்களை நினைத்து வழிபட தானம் கொடுத்து தர்ப்பணம் செய்தால் நம் சந்ததி எந்தவித பிரச்னைகளும் இன்றி நீண்ட ஆயுளுடன்,க்ஷேமத்துடன் இருப்பர் என்பது ஐதீகம் ஆகும்.
சாதாரண அமாவாசை தினத்தில் பித்ருக்கள் வந்து நாம் அளிக்ககூடிய உபசாரங்களை மனதார ஏற்றுக்கொள்வதாக ஐதீகம் உண்டு. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
specialties of mahalaya amavasai
படவிளக்கம்: முன்னோர் வழிபாட்டிற்கான பிரார்த்தனை துவங்குகிறது. (கோப்புபடம்)
specialties of mahalaya amavasai
மஹாளயம் என்றால் கூட்டமாக என்று பொருள்.இந்த காலத்தில் நம் பித்ருக்கள் அனைவரும் நம்மைப்பார்க்க பூலோகம் வருவதாக ஐதீகம். வந்து 15 நாட்கள் நம்முடன் தங்கியிருந்து நாம் அளிக்கும் உபசாரங்களை ஏற்றுக்கொண்டு நம்மை நம் குடும்பத்தினரை ஆசிர்வதித்து செல்வதாக ஐதீகம். பட்சம் என்றால் 15 நாட்கள் என்பது பொருள். அந்த வகையில் மஹாளய பட்சம் என்பது மொத்தம் 15 நாட்கள் ஆகும். இந்நாளில் விரதமிருந்து தத்தம் பித்ருக்களுக்கு அவர்களுக்குண்டான திதியில் தானம், தர்ப்பணம் செய்வதால் அவர்கள் பூரண மனதுடன் நம்மையும் நம் சந்ததியினரையும் ஆசிர்வதித்து செல்வார்கள் என்பது ஐதீகம்.
மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் காருண்ய தர்ப்பணம் கொடுப்பதே இதன் தனிச்சிறப்பாக திகழ்கிறது.
மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானதாகும்,தினந்தோறும் செய் யமுடியாதவர்கள் நம் முன்னோர்கள் இறந்த திதி தினத்தன்று செய்வது சாலச்சிறந்தது. நம் சந்ததியினருக்கும் இதனால் பல க்ஷேமங்கள் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கிறது.
specialties of mahalaya amavasai
பட விளக்கம்: முன்னோர்களுக்காக எள்ளும் , தண்ணீர், அரிசி இறைக்கப்படுகிறது
மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் நம்முடைய வாழ்வில் நாம் பல சுபிட்சங்களை காணலாம்.
. 1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும்
2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம்.
3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும்
4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம்.
5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும்.
6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும்.
7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும்.
8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும்.
9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும்.
10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும்.
11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும்.
12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும்.
13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும்.
14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும்.
15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.
வருடத்தில் 12 மாதங்கள். இதில் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதேபோல் ஆண்டுகளில் தை, ஆடி உள்ளிட்ட தமிழ் மாதங்களில் வரும் அமாவாசையில் கூடுதல் சிறப்பு நமக்கு கிடைக்கும். அன்றும் நாம் நம் பித்ருக்களுக்குதானம், தர்ப்பணம் ஆகியவைகளை செய்ய வேண்டும். இதனைவிட மஹாளய அமாவாசையானது சிறப்போ சிறப்பு .
specialties of mahalaya amavasai
மங்களம் உண்டாகாது
ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி அன்று நமது பித்ருக்களை அதாவது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அது தவிர அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில், மறைந்த திதியில், சிரார்த்தம் செய்வோம்.
மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களை ஒரு போதும் மறக்கக் கூடாது. நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
மகாளய அமவாசை அன்று அனைத்து முன்னோர்களையும் நினைவு கூற வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு, அதாவது கடல் அல்லது ஆறுகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து, அவர்களது ஆசியை பெற தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது.
இந்த மகாளய அமாவாசை தினத்தில் எறும்பு, காகம், நாய், பூனை, பசு மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் ஒரு சேர கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நமது வாழ்வில் வரும் இன்பங்கள், இன்னல்கள் யாவும் நாம் எமது முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப அமைகிறது. அதில் பித்ருக்களுக்கான காரியமும் ஒன்றாகும். எனவே, முன்னோர்களின் ஆசிகளை முழுமையாக பெற சிரத்தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும். அதில் தவறினால் பித்ருக்களின், அதாவது முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu