சாமந்தக்கோட்டை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவிலில் சிவராத்திரி பெருவிழா

சாமந்தக்கோட்டை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவிலில் சிவராத்திரி பெருவிழா
X

முதல் கால பூஜையில், அர்த்த நாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்த காசி விஸ்வநாத ஸ்வாமி

அவினாசி அருகே சாமந்தக்கோட்டை அங்காள பரமேஸ்வர் உடனுறை காசிவிஸ்வநாதர் கோவிலில் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அவினாசி அருகே சாமந்தக்கோட்டையில், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி உடனுறை ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு, மகா சிவராத்திரி திருவிழா, இன்று (மார்ச் 1) விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ வாராகி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்.

சிவராத்திரி விழாவில் 4 கால பூஜைகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்கால பூஜை நடைபெற்று முடிந்தது. முதல்கால பூஜை நிறைவில், காசிவிஸ்வநாத ஸ்வாமி, அர்த்தநாரீஸ்வர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

அதேபோல், ஸ்ரீ வாராகி அவதாரத்தில், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் அருள்பாலித்தார். சிறப்பு அலங்கார பூஜைகளை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். பக்தர்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அடுத்தடுத்த கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!