கர்மாவைப் போக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்

கர்மாவைப் போக்கும் சித்ரா பௌர்ணமி  விரதம்
X

கோப்புப்படம் 

சித்ரா பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் விரதம் இருந்தால் எந்த ஒரு தடையாக இருந்தாலும் உடனடியாக நிவர்த்தி ஆகும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்

சூரியனின் முழு ஒளியை சந்திரன் கிரகித்து அதை பூமிக்கு அனுப்புவது பௌர்ணமி தினத்தன்று தான் . இப்படி இருக்கும் பொழுது சூரியனின் ஒளி கதிர்கள் அதிகமாக சித்திரை மாதத்தில் தான் வெளிப்படும் என்று நம் முன்னோர்கள் கணித்திருக்கிறார்கள். அறிவியல் ரீதியாகவும் பூமி ஒரு அற்றில் சுழன்று கொண்டிருக்கிறது.

அந்த அச்சு சூரியனுக்கு மிக நெருக்கமாக வரும் காலம் தான் சித்திரை மாதம் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திரத்தை நாம் கணிப்பது உண்டு. குறிப்பாக மேஷ ராசியில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களில் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலங்களில் அக்னி நட்சத்திரத்தை கணிப்பது உண்டு. சில வருடங்களில் பரணி நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தில் அக்னி நட்சத்திரத்தை நாம் கணிப்பது உண்டு. இதற்கெல்லாம் ஆதாரம் ஆக சூரியனின் அதிகப்படியான ஒளிக்கற்றை பூமியின் மீது விழுவதே சித்திரை மாதத்தின் நாம் பெறக்கூடிய அம்சமாக இருக்கிறது.

இப்படி சூரியனின் முழு சக்தியை சித்தரை மாதத்தில் நாம் பெறும் பட்சத்தில் சந்திரனும் பௌர்ணமி தினத்தன்று சூரியனின் முழு ஒளித்திறனையும் பெறுகிறது; சூரியனின் சக்தி வாய்ந்த பூமிக்கு மிக நெருக்கமாக வரும் சூரியனின் ஒளியை வாங்கும் சந்திரன் மிகவும் வலிமை அடைகிறார் அந்த நாள் தான் சித்ரா பௌர்ணமி தினம்.

இந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு மேல் பௌர்ணமி திதி ஆரம்பித்தாலும் 22 ஆம் தேதி முழு இரவு மூன்றாம் தேதி முழு பகலும் நமக்கு பௌர்ணமி திதியாக வருகிறது. இந்த சமயத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து நல்ல நீதிபமாக நம் இஷ்ட தெய்வத்திற்கு ஏற்றி வழிபட வேண்டும்.

முடிந்தவர்கள் காலையிலேயே நீராடி விட்டு வீட்டை சுற்றிலும் மஞ்சள் நீரால் தெளித்து விட்டு காலையில் உங்கள் வீட்டில் அருகாமையில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று ஒன்பது முறை நவகிரகத்தை சுற்றிவர பௌர்ணமி அன்று பெறக்கூடிய அனைத்து சக்திகளையும் நீங்கள் பெறலாம். ஒருவேளை நீங்கள் மிகுந்த பக்தியோடு இருப்பவர் ஆயினும் சர்க்கரை பொங்கல் நிவேதனம், பாயாசம் போன்றவற்றை தெய்வங்களுக்கு படைக்கலாம்

பௌர்ணமிக்கு பொதுவாக திருவண்ணாமலை கிரிவலமோ அல்லது மழை சார்ந்த பகுதிகளை சுற்றி வருவதையோ நம் முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மட்டுமே கிரிவலத்திற்கு ஏற்ற தலம் என்று கூறி விட முடியாது. திருவண்ணாமலை ஒரு முக்கியமான ஸ்தலம் இயற்கையாகவே மூலிகை நிறைந்த காற்றுகள் இரவில் உலா வரும். அந்த சமயத்தில் நீங்கள் மலையை சுற்றி வரும் பொழுது அதிலிருந்து வரக்கூடிய மூலிகை சக்தியானது உங்கள் உடலில் பரவி நல்ல ஆரோக்கியத்தையும் நோயை முறிக்கக் கூடிய தன்மையையும் ஏற்படுத்தும்.

இதனால் தான் முன்னோர்கள் கிரிவலத்தை பௌர்ணமியில் வைத்தார்கள். சந்திரனின் ஒளி நேராக மூலிகை செடியின் மீதும் அல்லது தாவரங்களின் மீது படும்போது ஒருவித சக்தியை தாவரங்கள் கிரகித்துக் கொண்டு அதை காற்றாக வெளியிடுகின்றது. இந்த சமயத்தில் நாம் அதை சுவாசிக்கும் போது நமக்கும் அந்த சக்தி ஏற்படுகிறது.

இப்படியாக உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய மலை நிறைந்த பகுதிகளில் நீங்கள் கிரிவலம் வரலாம் . ஆனால் கிரிவலம் வரவேண்டும் என்று கட்டாயம் அல்ல ஏனென்றால் சில மலைப்பகுதிகளில் ஆபத்தான விலங்குகள் கூட இருக்க வாய்ப்பு உண்டு. அதையும் நீங்கள் மனதில் வைக்க வேண்டும்.

சித்ரா பௌர்ணமி அன்று நீங்கள் நிச்சயமாக விரதம் இருக்கலாம். வீட்டில் பணம் தங்கவே இல்லை என்று கூறுகிறவர்கள், சுப காரியங்களை நடக்கவில்லை என்று சொல்லுகிறவர்கள், நிச்சயமாக நீங்கள் முழு நாளும் விரதம் இருக்கலாம் . விரைவு ஆகாரமாக ஏதேனும் எடுத்துக் கொண்டால் கூட பரவாயில்லை. குறிப்பாக முழு நாட்களில் விரதம் இருப்பவர்கள் பால் அருந்தலாம்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்