பக்தர்களே பூஜை செய்து வழிபடும் சாம்பவர் வடகரை அய்யப்பன் சுவாமி கோவில்

பக்தர்களே சுவாமி அய்யப்பனை பூஜை செய்து வழிபடும் முறையில் அமைக்கப்பட்ட சாம்பவர் வடகரை அய்யப்பன் சுவாமி கோவில்.
பக்தர்களே சுவாமி அய்யப்பனை பூஜை செய்து வழிபடும் முறையில் அமைக்கப்பட்ட சாம்பவர் வடகரை அய்யப்பன் சுவாமி கோவில்.
கார்த்திகை 1 - ஆம் தேதி முதல் கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியதையொட்டி சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வேண்டி நாடெங்கிலும் இருந்து லட்சகணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி சுமந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முடியாமல் போன ஐயப்ப பக்தர்களுக்கு, சாம்பவர் வடகரை ஐயப்பன் கோவில் வரப்பிரசாதமாக அமைந்தது.
சபரிமலை ஐயப்பன் கோவில் போன்று 18 படிகளுடன் அமையப்பெற்ற சாம்பவர் வடகரை ஐயப்பன் ஆலயத்தில் கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி சுமந்து ஐயப்பனை தரிசித்து சென்றனர். இந்த ஆலயத்தில் பக்தர்கள் தங்களது தாய் தந்தையரோடு 18 படிகளில் ஏறிச்சென்று சுவாமி ஐயப்பனுக்கு தாமே மாலை அணிவித்தும், நறுமணம் ஏற்றி கற்பூரம் காண்பித்தும் வழிபடக்கூடிய வகையில் சுதந்திர வழிபாட்டு முறையில் இவ்வாலயம் அமைக்கப்பட்டிருப்பது சாம்பவர் வடகரை ஐயப்பன் ஆலயத்தின் சிறப்பு.
மேலும் பால், தயிர், சந்தனம், நெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் எதற்காக ஐயப்பனுக்கு செய்கிறோம் என்பதை விளக்கி கூறப்படுவதும் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு. இந்த ஆலயத்திலும் கார்த்திகை 1-ஆம் நாளில் இருந்து மண்டல பூஜை துவங்கி தினமும் சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், சபரிமலை சென்று திரும்பும் ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபட்டு செல்கின்றனர். தை மாதம் 1-ஆம் நாள் மாலை 6.44 மணிக்கு மகரஜோதி (நெய்தீபஜோதி) ஏற்றப்பட உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu