உங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டுமா? சாய்பாபா மந்திரம் சொல்லுங்க
![உங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டுமா? சாய்பாபா மந்திரம் சொல்லுங்க உங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டுமா? சாய்பாபா மந்திரம் சொல்லுங்க](https://www.nativenews.in/h-upload/2022/08/25/1582161-sai-baba1.webp)
Sai Baba Slogan Tamil -மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பல வகையான ஆசைகள் உண்டு. ஆனால் எல்லோருக்குமே அவர்கள் நினைத்த, ஆசைப்பட்ட காரியங்கள் நிறைவேறுவதில்லை. தன்னை அன்போடு நினைப்பவர்களின் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன் என்று சத்திய வாக்கு உரைத்தவர் ஷீரடி நாதனாகிய "ஸ்ரீ சாய் பாபா".
இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். கடவுள் தத்தாத்திரேயரின் மரு உருவமாக கூறப்படும் சீரடி சாய் இவ்வுலகில் இருந்த போது பல அதிசயங்களை நிகழ்த்தி தன் திவ்ய சக்தியை எல்லோருக்கும் அறிய செய்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம்
சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
நம் விருப்பங்கள் நிறைவேற அவரை வழிபடுவதற்காக மந்திரம் தான் இது. 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். வியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டிய ஸ்ரீசீரடி சாய் பாபாவின் மந்திரங்களை பார்க்கலாம்.
"ஓம் சேஷ சாய்னே நமஹ"
இம்மந்திரத்தை வியாழக்கிழமைகளில் "ஸ்ரீ சாய் பாபா" ஆலயத்திற்குச் சென்று, அவரது விக்கிரகத்திற்கு பால் அபிஷேகம் செய்வித்து, இம்மந்திரத்தை 108 முறை ஜெபித்து வணங்கி வர நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தையும் "ஸ்ரீ சாய் பாபா" நிறைவேற்றித்தருவார்.
ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:
ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாய் ப்ரசோதயாத்.
தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
ஷீரடி சாயி பாபாவின் த்யான ஸ்லோகம்:
பத்ரி க்ராம ஸமத் புதம் த்வாரகா மாயீ வாசினம் பக்தா பீஷ்டம் இதம் தேவம் ஸாயி நாதம் நமாமி.
ஷீரடி சாயி பாபாவின் மூல மந்திரம்:
"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி".
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu