சபரிமலைக்கு போறீங்களா? புது கட்டுப்பாடுகளை விதித்தது கேரள அரசு
கோப்பு படம்
கேரள மாநிலம் பதினம்திட்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டல பூஜைக்காக, இன்று மாலை திறக்கப்படுகிறது. கோவிலின் மேல்சாந்தி பதவியேற்பு நிகழ்வுக்கு பின்னர், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நாளை தொடங்கி, வரும் டிசம்பர் 26ம் தேதி வரை, வழக்கமான மண்டல பூஜைகள் நடைபெற உள்ளன.
இதனிடையே, கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன மழையால் இடுக்கி, பம்பா அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. பெரியாறு, பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், சபரிமலை பக்தர்களுக்கு கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் முன்பதிவு செய்த, 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். வரும் 18ஆன் தேதி வரை, முன்பதிவு செய்த பக்தர்களுக்கு, வேறு தேதியில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
வாகனங்கள், கடந்த ஆண்டை போலவே, நிலக்கல் வரை மட்டுமே அனுமதி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சன்னிதானம் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் தங்கக்கூடாது; கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில், இம்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu