சித்திரை விஷு: சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயில். (கோப்பு படம்).
Sabarimalai Online Booking Tamil-கேரளா மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மேலும், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களும் நடை திறக்கப்பட்டு இருக்கும். இதுதவிர பங்குனி ஆராட்டு விழா மற்றும் சித்திரை விஷு விழா ஆகியவைகளும் சபரிமலையில் மிகவும் பிரசித்தி பெற்றவை. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை விஷு திருவிழா ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. விஷு விழாவிற்காக ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சபரிமலையில் நடை திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது.ஏப்ரல் 15 ஆம் தேதி சித்திரை விஷு விழாவை முன்னிட்டு, அன்று அதிகாலை 4 மணி முதல் சபரிமலை ஐயப்பன் காய்கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
காலை 7 மணி முதல் கோவில் தந்திரி மற்றும் மேல் சாந்தி ஆகியோர் இணைந்து பக்தர்களுக்கு கைநீட்டம் எனப்படும் சில்லறை காசுகளை பிரசாதமாக அளிப்பார்கள். ஆண்டுதோறும் இந்த நிகழ்விற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் வந்துச் செல்வது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு சித்திரை விஷு விழாவிற்காக ஏப்ரல் 11 முதல் 19 ஆம் தேதி வரை நடை திறக்கப்பட உள்ளதால், இதற்காக பக்தர்கள் முன்பதிவு செய்வதற்காக ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது. ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
ஆன்லைன் முன்பதிவு மட்டுமல்லாது திருவிழா காலங்களில் முன்பதிவு செய்யாமல் நேரடியாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக ஸ்பாட் புக்கிங் எனப்படும் உடனடி புக்கிங் மையங்களும் செயல்படும் என சபரிமலை தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu