சபரிமலையில் பிப். 12 இல் நடை திறப்பு.. ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்...

சபரிமலையில் பிப். 12 இல் நடை திறப்பு.. ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்...
X

சபரிமலை ஐயப்பன் கோயில். (கோப்பு படம்).

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்படுவது உண்டும். மேலும், சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

இதன் தொடர்சியாக, மாசி மாத பூஜைகளுக்காக வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு 17 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது. 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றுகிறார்.

அன்றைய தினமே பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும் அன்று வேறு பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 5 மணிக்கு நெய் அபிஷேகத்தில் தொடங்கி இரவு வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்படும்.

குறிப்பாக 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 17 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வருகின்றனர். ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல்லில் உடனடி புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture