மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படுகிறது

மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படுகிறது
X

சபரிமலை சன்னிதானம்

மாதாந்திர பூஜைகளுக்காக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைகளுக்காக வரும் 17ம் தேதி முதல் 21 வரை திறக்கப்படவுள்ளது.

மாதாந்திர பூஜைகளுக்காக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில், ஆலயம் மாதாந்திர பூஜைகளுக்காக வரும் 17ம் தேதி முதல் 21 வரை திறக்கப்படவுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ், கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில், உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.

தற்போது கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இம்மாதம் 17 முதல் 21ஆம் தேதி வரை திறக்கப்பட உள்ளது. இந்த ஐந்து நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆன்லைன் மூலம் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தாலும், தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

அதில் கொரோனா இல்லை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டவர்கள், அந்த சான்றை காட்டினால் சபரிமலை ஆலயத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.


Tags

Next Story
ai marketing future