Sabarimala- சபரிமலையில் அதிகரித்த பக்தர் கூட்டம்; 9 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம்

Sabarimala- சபரிமலையில் அதிகரித்த பக்தர் கூட்டம்; 9 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம்
X

Sabarimala- சபரிமலையில் அதிகரித்த பக்தர் கூட்டம் (கோப்பு படம்)

Sabarimala- கேரள மாநிலம், சபரிமலையில் வீற்றிருக்கும் சுவாமி அய்யப்ப சுவாமியை தரிசிக்க பக்தர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 9 மணி நேரம் வரை காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

Sabarimala, Devotees Crowd, 9 Hours Waiting, Swami Darshanam- சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி கடந்த மாதம் 16 -ந் தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டி முன்பதிவு செய்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலைக்கு பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பக்தர் கூட்டம் வரை நீண்ட வரிசையில் 9 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்த பக்தர்களுக்கு சுக்கு நீர், பிஸ்கட், உண்ணியப்பம் போன்றவை தேவஸ்தான தன்னார்வ தொண்டர்களால் வழங்கப்படுகிறது. மேலும் அய்யப்பா சேவா சங்கத்தினரும் உதவி செய்து வருகிறார்கள். ஆன்லைன் தரிசனத்திற்கு இதுவரை எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாததால், நேரடியாக நிலக்கல் வந்து உடனடி தரிசன முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதாவது சராசரி 10 ஆயிரம் பக்தர்கள் தினசரி இந்த வகையில் முன்பதிவு செய்து சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று ஒரே நாளில் 70 ஆயிரம் பேர் வரை சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தற்போது 17 மணி நேரம் நேரம் சபரிமலையில் நடை திறந்து வழிபாடு நடக்கிறது. பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், நடை திறப்பு நேரத்தை 18 மணி நேரமாக அதிகரிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதாவது தினசரி மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதனை மாற்றி 3 மணிக்கு திறந்தால் கூடுதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி ஏந்தி பெருவழிப்பாதை வழியாக யாத்திரையாகவோ, அல்லது பம்பையில் இருந்து வழிப்பயணமாகவோ சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இன்னும் வரும் நாட்களில் இன்னும் பன்மடங்கு பக்தர் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!