Sabarimala Ayyappan Temple -ஐப்பசி மாத பூஜை; சபரிமலை ஐயப்பன் கோயில் அக்.17ல் நடைதிறப்பு

Sabarimala Ayyappan Temple -ஐப்பசி மாத பூஜை; சபரிமலை ஐயப்பன் கோயில் அக்.17ல் நடைதிறப்பு
X

Sabarimala Ayyappan Temple - ஐப்பசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 17-ம் தேதி மாலை  நடை திறக்கப்படுகிறது.

Sabarimala Ayyappan Temple - ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை அக்.17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

Sabarimala Ayyappan Temple - ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை அக்.17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17(செவ்வாய்க்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார்.

பின்னர், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். வழக்கமான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களசாபிஷேகம், சகஸ்ர காசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும்.

செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணியளவில் கோயிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையம் அக்.17 முதல் செயல்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil