இந்த பதிகத்தை தினமும் சொல்லுங்கள் சொந்த வீடு கட்டும் யோகம் தேடிவரும்

Siruvapuri Murugan Padal
X

Siruvapuri Murugan Padal

Siruvapuri Murugan Padal-சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு; கையில் ஒரு ரூபாய்கூட இல்லை என்றாலும் பரவாயில்லை. இந்த பதிகத்தை தினமும் உச்சரித்தால், சொந்தமாக வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

Siruvapuri Murugan Padal-காக்கை, குருவிக்கு கூட சொந்தமாக கூடுகள் உள்ள நிலையில், பெரும்பாலான மனிதர்கள் தனக்கென ஒரு வசிப்பிடம் இல்லாமல், மிக துன்பமான சூழ்நிலையில் வாழ்கின்றனர். சொந்த வீடு என்பது, ஒரு மனிதனின் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. இந்த இல்லம் குறித்த கனவு, ஒரு சிலருக்கு மட்டுமே நனவாகிறது. பல பேருக்கு, வாழ்நாள் முழுவதும் கனவாகவே போய்விடுகிறது. சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு ஒருமுறை சென்று வருவது மிகவும் சிறப்பானது. சென்னைக்கு அருகில் உள்ள இந்த சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்து, வேண்டிக்கொண்ட பலபேரின் வேண்டுதல் நிறைவேறாமல் இருந்ததே இல்லை என்று சொல்லலாம்.

சொந்த வீடு, கட்ட வேண்டும் என்று, வேண்டிக் கொண்டு, இந்த கோவிலுக்கு சென்று சின்ன சின்ன, கல்லை அடுக்கி வைத்து விட்டு வந்தாலே போதும். அவர்களது வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்து வந்தால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. பல பேரின் வேண்டுதல் நிறைவேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலில் சிறப்பு

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி, முருகப் பெருமானை வழிபட்ட திருத்தலம் என்ற மிகப். பெரிய சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. முடிந்தால் ஒருமுறை சிறுவாபுரி முருகப்பெருமா னை தரிசனம் செய்து இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்யலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை வைத்து, ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து, காலையில் இந்த பதிகத்தை மனமுருகி உச்சரித்து, சொந்த வீடு வேண்டும் என்ற வேண்டுதலை முருகப்பெருமானிடம் வையுங்கள். சொந்த வீடு கட்டி, குடி போகும் வரை இந்த பதிகத்தை நீங்கள் பாராயணம் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.

உங்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்பு எதுவுமே இல்லை. கையில் ஒரு பைசாவும் இல்லை. என்றாலும் கூட, பரவாயில்லை. முருகப்பெருமானிடம் கையேந்தி இந்தப் பதிகத்தைப் பாடி தொடர்ந்து உங்களது வழிபாட்டை வைத்து வந்தீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் வரும் என்பதில் சந்தேகமே இல்லை.

அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பதிகம்

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி …… வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய …… முருகேசா

சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே.

உங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும் வரை இந்த பதிகத்தை தினம்தோறும் உங்கள் வீட்டில் பாராயணம் செய்து கொண்டே இருங்கள்! சொந்த வீட்டை கட்டாமல் முருகப்பெருமானை விடுவதில்லை என்ற ஒரு குறிக்கோளுடன், எம்பெருமானின் திருப்பாதங்களை பிடித்துக்கொள்ளுங்கள்.

சொந்த வீடு அமைய, இந்த தெய்வங்களையும் வழிபடுங்கள்.

சொந்த வீடு, மனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் அதை பெறுவதற்கு அதற்குரிய தெய்வங்களை வணங்க வேண்டும். அப்படி ஒவ்வொருவரும் வழிபட்டால் நாம் பிரார்த்தனை செய்தது போன்று சொந்த வீடு கிடைக்கப் பெறலாம்.

மனிதராய் பிறந்த பலரின் கனவாக இருப்பது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது. அதற்கான குருவி சேர்ப்பது போல சிறிது, சிறிதாக பணத்தை சேர்த்து வைத்து வாங்க முயல்வார்கள். இருப்பினும் வாழ்க்கையில் பல விஷயங்கள் சாதகமற்றதாக அமைந்து சொந்த வீடு என்பது கனவாகவே போய் விடுகிறது.

சொந்த வீடு, மனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் அதை பெறுவதற்கு அதற்குரிய தெய்வங்களை வணங்க வேண்டும். அப்படி ஒவ்வொருவரும் வழிபட்டால் நாம் பிரார்த்தனை செய்தது போன்று சொந்த வீடு கிடைக்கப் பெறலாம்.

எந்த ராசியாக இருந்தாலும் முருகப்பெருமானைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால் வீடு, மனை வாங்கும் யோகம் வாய்க்கப் பெறலாம்.

கிரகங்களில் செவ்வாய் பூமி காரகன் என அழைக்கப்படுகிறார். செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். அதனால் தான் எந்த ராசியினராக இருந்தாலும் முருகனை வழிபட்டால் செவ்வாய் பகவானின் அருள் கிடைத்து வீடு பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதே போல ஒவ்வொரு ராசியையும் ஒரு கிரகம் ஆள்கிறது. இந்த கிரகங்களுக்குரிய இஷ்ட தெய்வங்களை நாம் வழிபடுவது அவசியம். அப்படி நாம் பிரார்த்தனை செய்து வழிபட்டால் நாம் நினைத்தபடி சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கப் பெறலாம்.

சொந்த வீடு கட்ட, வாங்க ஒவ்வொரு ராசியினரும் வழிபடவேண்டிய தெய்வங்கள் :

மேஷம் - அம்பாள்

ரிஷபம் - சிவபெருமான

மிதுனம் - மகாவிஷ்ணு

கடகம் - அம்பாள்

சிம்மம் - முருகப் பெருமான்

கன்னி - காவல் தெய்வங்கள் மற்றும் சித்தர்கள்

துலாம் - விநாயகப் பெருமான்

விருச்சிகம் - பைரவர் மற்றும் காவல் தெய்வங்கள்

தனுசு - முருகப் பெருமான்

மகரம் - அம்பாள்

கும்பம் - குலதெய்வம் மற்றும் காவல் தெய்வங்கள்

மீனம் - மகாவிஷ்ணு

சிறுவாபுரி முருகனை வழிபட்டு, அருணகிரிநாதர் பதிகத்தை தினமும் வழிபடுவதோடு, உங்கள் ராசிக்குரிய தெய்வங்களையும் தினமும் வழிபடுங்கள். சொந்த வீடு கனவு, விரைவில் நனவாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!