Tomorrow Jul 5 Rasi palan இவ்ளோ நாள் பட்ட கஷ்டம் இனி விலகிப் போகும்!

Tomorrow Jul 5 Rasi palan  இவ்ளோ நாள் பட்ட கஷ்டம் இனி விலகிப் போகும்!
X
Tomorrow Meenam Rasi Palan in Tamil -மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாளுக்கான [5 ஜூலை 2023, புதன்கிழமை] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் என்ன, அன்றைய தினம் இந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

Tomorrow Meenam Rasi Palan in Tamil -நாளை சந்திராஷ்டமம் எந்த நட்சத்திரம் – திருவாதிரை

நல்ல நேரம்:

காலை: 9.15 - 10.15 மணி வரை

மாலை: 4.45 - 5.45 மணி வரை

மேஷ ராசி பலன் ஜூலை 5, 2023 | Mesham rasi palan Tomorrow Jul 5

மனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மருத்துவம் தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தை புதிய இடத்திற்கு மாற்றி அமைப்பது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். கல்வியில் இருந்து மந்தத்தன்மை குறையும். வரவு! nalaya rasi palan Mesham

ராசியான நிறம்: சிவப்பு

ராசியான எண்: 1

துலாம் ராசி பலன் ஜூலை 5, 2023 | Thulam rasi palan Tomorrow Jul 5

கல்வி சம்மந்தமான பயணங்கள் கைகூடும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீது மதிப்பு அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் மீதான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றம் ஏற்படும். உறவினர்களை புரிந்துக்கொள்ளும் சந்தர்ப்பம் அமையும். திறமை! nalaya rasi palan Tulam

ராசியான நிறம்: ஆரஞ்சு

ராசியான எண்: 1

ரிஷப ராசி பலன் ஜூலை 5, 2023 | Rishabam rasi palan Tomorrow Jul 5

உங்களின் தன்மையைப் புரிந்துக் கொண்டு உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய இடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். புது தொழில்நுட்பம் தொடர்பான தேடல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். பெரியோர்களின் ஆசியால் தெளிவு பிறக்கும், வியாபாரத்தில் சிறு சிறு அலைச்சல்கள் தோன்றி மறையும், தாமதம்! nalaya rasi palan Rishabam

ராசியான நிறம்: நீலம்

ராசியான எண்: 3

விருச்சிக ராசி பலன் ஜூலை 5, 2023 | Viruchigam rasi palan Tomorrow Jul 5

சந்தர்ப்பங்களில் துணிச்சலுடன் முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும், மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றுவீர்கள் சகோதரர் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். நன்மை! nalaya rasi palan Viruchigam

ராசியான நிறம்: இளம் மஞ்சள்

ராசியான எண்: 3

தனுசு ராசி பலன் ஜூலை 5, 2023 | Dhanusu rasi palan Tomorrow Jul 5

புதிய வீடு தொடர்பான கடன் உதவிகள் சாதகமாக அமையும். பெரியவர்களின் ஆலோசனையால் தெளிவு கிடைக்கும். பயனற்ற வாக்குறுதிகளை குறைப்பது நல்லது. கணிதம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத நபர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். வராமல் தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். தாயாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் மேம்படும். அமைதி! nalaya rasi palan dhanush

ராசியான நிறம்: இளஞ்சிவப்பு

ராசியான எண்: 3

மிதுன ராசி பலன் ஜூலை 5, 2023 | Midhuna rasi palan Tomorrow Jul 5

பொன், பொருட்கள் வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் அதிகரிக்கும். தேவையற்ற இடத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயங்களில் விவேகமாக செயல்படவும். உங்கள் மீது இருந்து நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்படும். மற்றவர்களிடத்தில் கனிவுடன் பேசுவதால் நன்மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். செலவு! nalaya rasi palan Mithunam

ராசியான நிறம்: ஆரஞ்சு

ராசியான எண்: 3

மகர ராசி பலன் ஜூலை 5, 2023 | Magaram rasi palan Tomorrow Jul 5

திட்டமிடாத பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். தேவையில்லாத சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எந்த செயலாக இருந்தாலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்துச் செல்வது வாழ்க்கையில் 4 மகிழ்ச்சியை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். புதிய வாய்ப்புகள் கிடைத்தால் தெளிவாக சிந்தித்து செயல்படவும், தெளிவு! nalaya rasi palan magaram

ராசியான நிறம்: வெள்ளை

ராசியான எண்: 2

கும்ப ராசி பலன் ஜூலை 5, 2023 | Kumbam rasi palan Tomorrow Jul 5

வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். வீட்டில் இருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள் நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும், சில அனுபவங்களின் மூலம் புதிய கண்ணோட்டம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சுவனம் வேண்டும். ஆடம்பர் பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும், பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் மேம்படும். பக்தி! nalaya rasi palan Kumbam

ராசியான நிறம்: ஆரஞ்சு

ராசியான எண்: 4

கடக ராசி பலன் ஜூலை 5, 2023 | Kadaga rasi palan Tomorrow Jul 5

எந்த விஷயமாக இருந்தாலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கிடைக்காமல் போன சில வாய்ப்புகள் வந்து சேரும். வீட்டில் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களு முன்னேற்றம் உண்டாகும். போட்டித் தேர்வு எழுதியவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். ஆதரவு! nalaya rasi palan kadagam

ராசியான நிறம்: வெள்ளை

ராசியான எண்: 2

சிம்ம ராசி பலன் ஜூலை 5, 2023 | Simma rasi palan Tomorrow Jul 5

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. வாகன பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன் - மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். தெளிவு! nalaya rasi palan simmam

ராசியான நிறம்: கருநீலம்

ராசியான எண்: 5

மீன ராசி பலன் ஜூலை 5, 2023 | Meenam rasi palan Tomorrow Jul 5

பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். உழைப்பிற்கு ஏற்ற பாராட்டு கிடைக்கும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உயர் பதவிகளின் அறிமுகம் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் மேம்படும். கனிவு!nalaya rasi palan meenam

ராசியான நிறம்: அடர் சிவப்பு

ராசியான எண்: 9

கன்னி ராசி பலன் ஜூலை 5, 2023 | Kanni rasi palan Tomorrow Jul 5

வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக திருப்பங்கள் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுபகாரியம் தொடர்பான விஷயங்கள் கைகூடி வரும். சேமிப்பு சம்மந்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே புரிதல் மேம்படும். அறிவுத்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த துறையில் முன்னேற்றம் அமையும். வெற்றி! nalaya rasi palan kanni

ராசியான நிறம்: மஞ்சள்

ராசியான எண்: 2


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி