Tomorrow Rasi palan தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டிய நாள் இது!

Tomorrow Rasi palan தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டிய நாள் இது!
X
மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 1 ஆம் நாளுக்கான [15 மார்ச் 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

மேஷ ராசி பலன் மார்ச் 15, 2023 | Mesham rasi palan Tomorrow

உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். எதிர்காலத்திற்கு திட்டமிடுங்கள்.பணியில் அதிகப்படியான சுமைகள் காணப்படும். உங்கள் பணிகளை முறையாக முடிக்க சில சௌகரியங்களை இழக்க நேரும். பணியிடத்தில் காணப்படும் பதட்டத்தை உங்கள் துணையிடம் வெளிபடுத்து வீர்கள்.இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று பணபுழக்கம் குறைந்து காணப்படும். தேவையற்ற செலவுகள் உங்களுக்கு கவலையை அளிக்கும். தூக்கமின்மை காரணமாக முதுகு வலி ஏற்பட்டு அதனால் கவலை உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

துலாம் ராசி பலன் மார்ச் 15, 2023 | Thulam rasi palan Tomorrow

வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியில் வேலையை சிறப்பாக செய்து முதலாளியின் பாராட்டை பெறுவீர்கள். தொழிலில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் தனவரவு உண்டு. குவாரி வைத்திருப்பவர்களுக்கு பொற்காலம் தான். தம்பதிக்குள் அன்பு, அக்கறை அதிகரிக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அரக்கு

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷப ராசி பலன் மார்ச் 15, 2023 | Rishabam rasi palan Tomorrow

உணர்வுரீதியாக எளிதில் பாதிக்கப்படுவீர்கள் - எனவே நீங்கள் காயப்படக் கூடிய சூழ்நிலைகளில் இருந்து தள்ளியிருங்கள். இன்று, பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் வீட்டை விட்டு வெளியேறுங்கள், இதன் மூலம் நீங்கள் பயனடையலாம். உங்கள் புதிய திட்டங்கள் மற்றும் பிளான்கள் குறித்து பெற்றோரின் நம்பிக்கையையும் பெறுவதற்கு இது நல்ல காலம். இந்த நேரத்தில், உங்கள் வீட்டிற்கு நெருக்கமான ஒருவருடன் நீங்கள் வருத்தப்படக்கூடும், மேலும் உங்கள் மனநிலை பாதிக்கப்படலாம். உங்கள் துணைவர்/துணைவி நீங்கள் அவரிடம் ஏதோ ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைத்தால் கோபமடையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிக ராசி பலன் மார்ச் 15, 2023 | Viruchigam rasi palan Tomorrow

பொறுமையின் சிகரமாக இருக்க வேண்டிய நாள். துணையுடன் பேசும்பொழுது வார்த்தையை விடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை உண்டாக்கலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மற்றவர்களை பற்றி குறைக்கூறுவதை தவிர்ப்பதன் மூலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். சிலருக்கு எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

தனுசு ராசி பலன் மார்ச் 15, 2023 | Dhanusu rasi palan Tomorrow

அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். தொழிலில் அடுத்தவர் பேச்சை கேட்பதை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் சற்று நிதானத்தை காட்டுங்கள். சிலருக்கு பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்த விவகாரம் முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினருடன் விட்டுக் கொடுத்து நடந்து பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மிதுன ராசி பலன் மார்ச் 15, 2023 | Midhuna rasi palan Tomorrow

எதை பேசும்போதும் கவனமாக பேச வேண்டும். நண்பர்களுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் வேலைகள் அடுக்கிக் கொண்டே போகும், இதனால் முக்கிய பணிகள் தள்ளிப் போகும். சிலர் புதிய வியாபாரம் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் துணை உங்களை கடுப்பாக்குவார். டென்ஷன் ஆக வேண்டாம். பயணத்தின் போது பணத்தை தொலைக்க வாய்ப்புள்ளது பார்த்து ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

மகர ராசி பலன் மார்ச் 15, 2023 | Magaram rasi palan Tomorrow

எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் பல நாட்களாக இருந்த வந்த பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. குறைந்த முயற்சியில் பெரிய வெற்றியை அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பேச்சு சகபணியாளர்களுக்கு மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கும்ப ராசி பலன் மார்ச் 15, 2023 | Kumbam rasi palan Tomorrow

நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்று இருக்காமல், பொறுமையுடன் முடிவெடுக்க வேண்டும். பணத்தை கையாளும்போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து சென்றால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கலாம். வேலை செய்யும் இடத்தில் சகப்பணியாளர்களிடத்தில் சின்ன சின்ன சண்டைகள் ஏற்படும். கணவன் - மனைவி இடையே தேவையற்ற பேச்சுக்களால் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

கடக ராசி பலன் மார்ச் 15, 2023 | Kadaga rasi palan Tomorrow

சாதுர்யமான பேச்சால் முன்னேற்றம் ஏற்படும் நாள். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். உங்க துணையின் விருப்பத்தை நிறைவேற்ற கொஞ்சம் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்த தனவரவு கைக்கு வந்து சேரும், இதனால் சேமிப்பு கூடும். தானியம் சம்பந்தமான வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

சிம்ம ராசி பலன் மார்ச் 15, 2023 | Simma rasi palan Tomorrow

எந்த விஷயத்திலும் கவனத்தோடும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுபார்கள். எனவே, புத்திசாலிதனமாக செயல்பட வேண்டும். யாருடம் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. தேவையற்ற செலவுகள் வரும். சுருக்கமாக சொல்லப்போனால் பொறுமையை சோதிக்கும் நாள் என்றே சொல்லலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மீன ராசி பலன் மார்ச்7, 2023 | Meenam rasi palan Tomorrow

பணவரவு தாரளமாக இருப்பதால், தொழிலை சாமர்த்தியமாக நடத்துவீர்கள். கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவீர்கள். அனாவசிய செலவை குறைத்துகொள்வது நல்லது. பங்குச்சந்தை நல்ல பலனை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது உத்தமம். சகஊழியர்களை அனுசரித்து போவதால், அவர்களின் ஒத்துழைப்பை பெறமுடியும். தன்நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கன்னி ராசி பலன் மார்ச் 15, 2023 | Kanni rasi palan Tomorrow

உத்தியோகத்தில் திறமையாக செயல்பட்டால் நல்ல பலன்களை பெறலாம். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரித்து காணப்படும். சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க நேரிடும். வியாபாரத்தில் லாபம் ஏறி, இறங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன் பிறந்தவர்களின் வழியாக சுபசெய்திகள் வீடு தேடி வரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பெயர் தெரியாதவர்களிடம் வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி