காதல் வாழ்க்கையை மாற்றும் நாள் இன்று!

Rasi Palan in Tamil
X

Rasi Palan in Tamil

Rasi Palan in Tamil-மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 29 ஆம் நாளுக்கான [12 ஏப்ரல் 2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

Rasi Palan in Tamil-நாளை சந்திராஷ்டமம் எந்த நட்சத்திரம் – ரோகினி, மிருகசீரிஷம்

நல்ல நேரம்:

காலை: 07.30 - 09.00 வரை

மாலை: 03.30 - 04.30 வரை

Nalaya rasi palan Mesham | மேஷ ராசி பலன் மே 9, 2023 | Mesham rasi palan Tomorrow May 9, 2023

Nalaya rasi palan Mesham | மேஷ ராசி பலன் ஏப்ரல் 12, 2023 | Mesham rasi palan Tomorrow April 12, 2023

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களைச் செய்யவேண்டிய நாள். உங்களின் நல்ல நண்பர்களுடன் ஆனந்தமாக நேரத்தை செலவிடுங்கள். மனசில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும், அவற்றை மனதைவிட்டு தள்ளி வைத்து, வீட்டிலும் நண்பர்களிடமும் அதிகம் பேசுங்கள். அதன் மூலம் உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் திட்டங்களை மிக வெளிப்படையாக கூறினால், உங்கள் காரியம் கெட்டுப் போகக் கூடும். உங்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி வெளியில் சென்று புதிய தொடர்புகளையும் நண்பர்களையும் உருவாக்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம்:

அதிர்ஷ்ட எண்: 10

Nalaya rasi palan Thulam | துலாம் ராசி பலன் மே 9, 2023 | Thulam rasi palan Tomorrow May 9, 2023

Nalaya rasi palan Thulam | துலாம் ராசி பலன் ஏப்ரல் 12, 2023 | Thulam rasi palan Tomorrow April 12, 2023

நீங்கள் அதிகபட்ச தைரியத்தையும் பலத்தையும் காட்ட வேண்டிய நாள் இதுவாகும். உங்களின் நல்ல மனதால் செய்யும் செயல்களால் நீங்கள் இன்று வெற்றி காண முடியும். சிறு தொழில்கள் செய்பவர்களுக்கு ஆலோசனை தேவைப்படும்போது அதை அனுபவ சாலிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இது அவர்களுக்கு பொருளாதார வகையில் பயனளிக்கும். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். இன்று காதல் மன நிலையில் இருப்பீர்கள் - நிறைய வாய்ப்புகள் வரும். விண்ணப்பம் அனுப்ப அல்லது நேர்காணலுக்குச் செல்ல நல்ல நாள். சில மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள். உங்கள் துணையின் அன்புக்காக ஏங்குகிறீர்கள் என்றால் அது இன்று அபரிமிதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya rasi palan Rishabam | ரிஷப ராசி பலன் மே 9, 2023 | Rishabam rasi palan Tomorrow May 9, 2023


Nalaya rasi palan Rishabam | ரிஷப ராசி பலன் ஏப்ரல் 12, 2023 | Rishabam rasi palan Tomorrow April 12, 2023

அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். நீங்கள் பணம் தொடர்பான பிரச்சனைகளில் சிக்க வாய்ப்புண்டு. கல்வியை விட்டுக் கொடுத்து வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபடுவது மிகவும் தவறானது அதை விட்டொழியுங்கள். விளையாட்டைவிட, எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம். பெற்றோரைத் திருப்தி படுத்துவதை விட எதிர்கால நலன் அறிந்து நடப்பது நன்று. காதல் கணை உங்கள் மீது இன்று பாய தயாராக இருக்கிறது. அந்த அற்புதத்தை உணருங்கள். புதிய திட்டங்கள் மற்றும் செலவுகளை தள்ளிப் போடுங்கள். கடந்த சில நாட்களாக மிகவும் பிஸியாக இருந்தவர்கள் இன்று தங்களுக்கு தேவையான நேரத்தை பெறலாம்

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya rasi palan Viruchigam | விருச்சிக ராசி பலன் ஏப்ரல் 12, 2023 | Viruchigam rasi palan Tomorrow April 12, 2023

உங்கள் மனதை போட்டு வாட்டிக் கொண்டிருக்கும் குழப்பங்களைத் தீர்க்க புத்திசாலித்தனமான அணுகுமுறையை கடைபிடியுங்கள். நீண்டகாலம் நிலுவையில் இருக்கும் கடன்கள் விரைவில் அடைக்கும் நேரம் வந்துவிட்டது. குடும்பத்தினரை வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களின் மனநிலையில் மாற்றம் காண்பீர்கள். இளைஞர்களுக்கு காதல் யோகம் அமையும் நாளாக இருக்கிறது. இன்று, உங்கள் ஓய்வு நேரத்தை தேவையற்ற சிக்கல்களிலிருந்து விலகி உங்கள் மனதுக்கு அமைதி தரும் இடங்களில் செலவிடுங்கள். உங்கள் துணையிடமிருந்து இன்று இதமான அணைப்பை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya rasi palan Dhanush | தனுசு ராசி பலன் ஏப்ரல் 12, 2023 | Dhanusu rasi palan Tomorrow April 12, 2023

நண்பர்கள் ஆதரவு அளித்து உங்களை மகிழ்விப்பார்கள். திடீர் செலவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் நீங்கள் அதை சமாளித்து விடுவீர்கள். வீட்டில் உடல் நல பிரச்னைகள் மேலோங்க வாய்ப்புண்டு. இதன் காரணமாக உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்பட காரணமாக இருக்கலாம். இந்த நாள் நீங்கள் காதலின் அற்புதத்தை உணர்ந்து மகிழ வாய்ப்பளிக்கும். உங்களின் கடின உழைப்பும் கடமை உணர்ச்சியும் உங்களுக்கு நம்பிக்கை மற்றும் ஆதரவை பெற்றுத் தரும். புதிய இடங்களுக்கு பயணப்பட வாய்ப்பு ஏற்படும். புதியவர்களிடம் நட்பு ஏற்படும். மகிழ்ச்சியான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya rasi palan Midhunam | மிதுன ராசி பலன் ஏப்ரல் 12, 2023 | Midhuna rasi palan Tomorrow April 12, 2023

தாரள மனம் கொண்ட மிதுன ராசிக்காரர்களே.. உங்களின் இந்த நிலைமைக்கு காரணம் நீங்கள்தான் என்பதை உணர்வீர்கள். இவ்வளவு நாள் சமூகத்தின் மீதும் உறவினர்கள் மீதும் புகார் சொல்லி எந்தப் பயனையும் தரவில்லை என்பது உணருங்கள். இப்போது வரை யோசிக்காமல் பணத்தை செலவு செய்து கொண்டிருந்தவர்களுக்கு இன்று நிறைய பணம் தேவைப்படலாம். பணத்தின் தேவையை உணர்ந்து செலவிடுவது குடும்பத்துக்கு நல்லது. குடும்பத்தோடு வெளியில் செல்வீர்கள். உங்களின் நம்பிக்கை, தொழில் வாழ்வில் நல்ல பலனை ஏற்படுத்தும். உங்கள் கருத்துகளை அவர்கள் தீரமாக நம்பும்படியாக நீங்கள் அதனை அடித்து கூறுவீர்கள். வேலையிடங்களில் பாராட்டைப் பெற வாய்ப்பு உருவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya rasi palan Magaram | மகர ராசி பலன் ஏப்ரல் 12, 2023 | Magaram rasi palan Tomorrow April 12, 2023

உதவிக்கு பெயர் போன மகர ராசிக்காரர்களே... கொஞ்சம் மன அழுத்தம் இருந்தாலும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவை எதிர்கொள்வீர்கள். உரிய காலத்தில் நீங்கள் செய்யும் உதவியால் ஒருவரை துரதிருஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவீர்கள். காதலர்கள், தம்பதிகள் இன்று மிகச் சிறந்த அன்பை பெறுவீர்கள். அலுவலகத்தில் இன்று அனைத்து வேலையிலும் உங்களைப் பாராட்டுவார்கள். இன்று, நீங்கள் கொஞ்சம் சோம்பேறியாக இருப்பீர்கள் என்றாலும் பொன்னான நேரத்தை வீணடித்தீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். எழுந்து வேலைக்கு கிளம்புங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya rasi palan Kumbam | கும்ப ராசி பலன் ஏப்ரல் 12, 2023 | Kumbam rasi palan Tomorrow April 12, 2023

எப்போதும் Chill ஆக இருக்கும் கும்ப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் ரிலாக்ஸ் பண்ண வேண்டிய நாள். முடிந்தால் அலுவலகத்துக்கு லீவு சொல்லிவிடுங்கள். பணவரவு கையில் அதிகமாக புரளும். தொழில் செய்பவர்கள் பொறுப்பை வேறு யாரிடமாவதும் ஒப்படைத்துவிட்டு குடும்பத்துடன் அருகாமையிலிருக்கும் பொழுது போக்கு இடங்களுக்கு சென்று வாருங்கள். மன அமைதியே மிகப் பெரிய செல்வம். பணத்தை சேமிக்க ஆலோசனையைப் பெற்று இன்று முதல் சேமிக்க துவங்குங்கள். குடும்பத்தில் புதிய உறுப்பினரின் வருகை உங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும். வீட்டில் புதிய வரவு குழந்தையாகவோ, மனைவியாகவோ இருக்கலாம். திருமணம் நிச்சயமானவர்கள், தாங்கள் திருமணம் செய்யப் போகும் நபரால் அதிக மகிழ்ச்சி அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya rasi palan kadagam | கடக ராசி பலன் ஏப்ரல் 12, 2023 | Kadaga rasi palan Tomorrow April 12, 2023

உடல் நலனில் அக்கறை கொள்ளும் கடக ராசிக்காரர்களே ! உடற் பயிற்சி, யோகா போன்றவற்றில் மிகச் சிறந்த விளங்கும் நீங்கள் உங்களின் வீட்டில் இருப்பவர்களையும் அதற்கு தயார் படுத்துங்கள். வரவேண்டிய கடன்கள் வந்து சேர்ந்து பொருளாதார நிலைமை மேம்படும். கெட்ட பழக்கங்களையும் விட்டொழிக்க இது சரியான நேரம். காதல் பாசிடிவான எண்ணங்களைக் காட்டும். வேலையிடங்களில் பெரியவர்கள் உங்களுக்கு உதவிட கூடும். அதுவே நீங்கள் வாழ்வில் உயர ஏதுவாக அமையலாம். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் பலன் தரக் கூடிய நாள். நீங்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போவீர்கள். இன்று மாலை உங்கள் துணையுடன் செலவிடும் நேரம் இன்பமாக அமையும்.

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya rasi palan Simmam | சிம்ம ராசி பலன் ஏப்ரல் 12, 2023 | Simma rasi palan Tomorrow April 12, 2023

உங்கள் பொறுமை காரணமாக வெற்றி அடைவீர்கள். பொறுமை மற்றும் புத்திசாலித்தனம் பொறுத்து உங்கள் வளர்ச்சி அமையும். உங்கள் செயல்களில் கவனம் தேவை. உறுதியும் தைரியமும் இருந்தால் இன்று வெற்றி பெறலாம். சாதாரண பணிகளை விட இன்று பணிகள் கூடுதலாக இருக்கும். உங்கள் துணையுடன் உறவு நல்லுறவாக அமைய அவருடைய கருத்துக்கும் மதிப்பு அளியுங்கள். அவருடன் நட்புணர்வு கொள்ளுங்கள். உங்கள் அதிர்ஷ்டத்தை விட திறமையில் நம்பிக்கை வேண்டும். பணபுழக்கம் சிறப்பாக இருக்காது. என்றாலும் அதனை பெரிதாகக் கொள்ள வேண்டாம். நிதிநிலையை மேம்படுத்த முயலுங்கள். தோல் அரிப்புகளை தடுக்க எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும். அதிகமாக வெயிலில் சுற்றாதீர்கள்..

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya rasi palan Meenam | மீன ராசி பலன் ஏப்ரல் 12 , 2023 | Meenam rasi palan Tomorrow April 12, 2023

உயர் நிலையில் இருப்பவரை சந்திக்கும்போது பதற்றமாகி நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். பிசினஸுக்கு முதலீட்டைப் போல நல்ல ஆரோக்கியம் இருப்பதும் முக்கியம். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் - எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். உறவினர்கள் வருகை, நீங்கள் கற்பனை செய்ததைவிட நல்லதாக இருக்கும். இன்று நீங்கள் செழுமையான காதல் சாக்லேட்டை உண்டு களிப்படையலாம். உங்கள் வேலை இன்று பலரும் பாராட்டும் வகையில் இருக்கும். இன்று நீங்கள் வீட்டின் சிறிய உறுப்பினர்களுடன் ஒரு பூங்கா அல்லது வணிக வளாகத்திற்கு செல்லலாம். உங்கள் மண வாழ்வில் இனிமையை கூட்டும் சிறந்த நாள் இது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya rasi palan kanni | கன்னி ராசி பலன் ஏப்ரல் 12, 2023 | Kanni rasi palan Tomorrow April 12, 2023

நண்பர்கள் ஆதரவு அளித்து அங்களை மகிழ்விப்பார்கள். உங்கள் பணம் எங்கு செலவிடப்படுகிறது என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் வரும் காலங்களில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்வுக்கு முறையாக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். தங்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை குடும்பத்தினரும் உணர வேண்டும். உங்கள் நேரத்தை அவர்களுடன் செலவிடுங்கள். விளையாட்டிலியே முழு பிஸியாக இருக்க வேண்டாம் இதனால் உங்கள் படிப்பு பாதிக்கபடும் னீங்கள் திருமண பந்த்துத்துக்குள் நுழயும் முன் எடுத்துக்கொண்ட உறுதி மொழிகள் அனைத்தும் நிஜமாக கூடும். உங்கள் துணை உங்கள் உயிரில் கலந்தவர்..

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!