முயற்சி செய்தால் நினைத்தது நிச்சயம் நடக்கும் ராசிக்காரர்கள்!

முயற்சி செய்தால் நினைத்தது நிச்சயம் நடக்கும் ராசிக்காரர்கள்!
X
Tomorrow Rasi Palan in Tamil 2023-மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 27 ஆம் நாளுக்கான [10 ஏப்ரல் 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.


Tomorrow Rasi Palan in Tamil 2023-நாளை சந்திராஷ்டமம் எந்த நட்சத்திரம் – கார்த்திகை

நல்ல நேரம்:

காலை: 07.30 - 09.00 வரை

மாலை: 03.30 - 04.30 வரை

Nalaya rasi palan Mesham | மேஷ ராசி பலன் ஏப்ரல் 10, 2023 | Mesham rasi palan Tomorrow


இன்று தவறுகள் நேராத வண்ணம் உங்களை நீங்கள் கண்காணித்துக் கொள்ள வேண்டும். உங்கள் பணிகளை முன்னுரிமைப் படுத்தி முறையாக கவனமாகக் கையாள வேண்டும். நீங்கள் இன்று பொறுமையுடனும் உறுதியுடனும் பணிகளை முடிக்க வேண்டும். தவறுகள் ஏற்படா வண்ணம் தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் துணையுடன் ஒருவர் கலந்து பேச வேண்டும். இதன் மூலம் புறக்கணிப்பு உணர்வு தவிர்க்கப்படும். அது உங்கள் உறவை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். உங்கள் செலவுகளை திட்டமிட்டு சிறப்பாக செலவு செய்ய வேண்டும். இதன் மூலம் இன்றைய தினம் சிறப்பாக இருக்கும். தியானம் மற்றும் பிரார்த்தனை மூலம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக்கொள்ள முடியும். கால் வலி ஏற்பட வாய்ப்பிருப்பதால் அலைச்சலைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

Nalaya rasi palan Thulam | துலாம் ராசி பலன் ஏப்ரல் 10, 2023 | Thulam rasi palan Tomorrow


செயல்களை திட்டமிட்டால் சிறப்பாக ஆற்றலாம். உங்கள் மனதில் மகிழ்ச்சி குறைந்தது போல உணர்வீர்கள். அமைதியாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம். சில கூடுதல் பொறுப்புகளை சுமக்க நேரும். கவனச் சிதைவு ஏற்படாத வகையில் பணிகளை ஆற்ற வேண்டும். உங்கள் பணிகளை அமைதியாக விடாமுயற்சியுடன் மேற்கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே கருத்து வேறுபாடு காணப்படும். பேசி தீர்ப்பதன் மூலம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இதனால் பிரச்சினைகள் தீரும். நிதிநிலைமை சுமாராக இருக்கும். சேமிப்பு மற்றும் சிக்கனமான செலவை மேற்கொள்ள வேண்டும். இருப்பதைக் கொண்டு வாழ்தல் அவசியம். இன்று கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்புள்ளது. கண்களில் கவனம் செலுத்துவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya rasi palan Rishabam | ரிஷப ராசி பலன் ஏப்ரல் 10, 2023 | Rishabam rasi palan Tomorrow


புதிய நபர்களின் நட்பு இன்று உங்களுக்கு கிடைக்கும். இது பின்னர் உங்களுக்கு பயனளிக்கும். உங்கள் பணிகளை நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் பணிக்கு உரிய பாராட்டு கிடைக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடிப்பீர்கள். நீங்கள் இருவரும் அன்பான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் உறவு சிறக்கும். பணம் அதிக அளவில் காணப்படும். பணம் செலவு செய்து அதன் விளைவில் திருப்தி அடைவீர்கள். பக்திப் பாடல்கள் கேட்பது பயனளிக்கும். அதன் மூலம் தேக ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் பராமரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya rasi palan Viruchigam | விருச்சிக ராசி பலன் ஏப்ரல் 10, 2023 | Viruchigam rasi palan Tomorrow


நீங்கள் உற்சாகமாக ஆற்றலுடன் செயல் பட வேண்டும். பொறுமையாக செயல்களைக் கையாள வேண்டும். உங்கள் கூடப் பிறந்தவர்களுடன் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். பணி சம்பந்தமாக இன்று பயணம் மேற்கொள்ள நேரும். பணியிடத்தில் சவால்கள் நிறைந்து காணப்படும் என்பதால் புத்திசாலித்தனமாக பணிகளைக் கையாள வேண்டும். உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும். அமைதியாக இனிமையாக உங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். செலவுகள் சிறது அதிகமாக காணப்படும் என்பதால் பணத்தை கவனமாக நிர்ணயிக்க வேண்டும். சிறப்பாக திட்டமிட வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கண்களை பரிசோதித்துக் கொள்ளவது சிறந்தது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya rasi palan Dhanush | தனுசு ராசி பலன் ஏப்ரல் 10, 2023 | Dhanusu rasi palan Tomorrow


இன்று உங்களிடம் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து காணப்படும். இதனை தவிர்த்தல் நல்ல மன நிலையுடன் காணப்படலாம். உற்சாகமுடன் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். சற்று மந்தமாகச் செயல்படுவீர்கள். அதனால் பணிகளை முடிக்க தாமதமாகும் கவனமாகப் பணியாற்றினால் முன்னேற்றம் கிடைக்கும். சிறந்த தகவல் பரிமாற்றம் மூலம் சிறந்த பிணைப்பு உருவாகும். இதனைப் பின்பற்றுவதன் மூலம் உறவில் அன்பை வளர்க்க முடியும். பண வரவு சுமாராக இருக்கும். பணத்தை எவ்வாறு கையாள்வது என்று புரிந்து கொண்டு சாதுர்யமாக செலவு செய்ய வேண்டும். அற்ப விஷயங்களுக்காக சிறிது குழப்பமடைவீர்கல். இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்காத வண்ணம் கவனித்துக் கொள்ளுங்கள். மனதில் நம்பிக்கையுடன் இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya rasi palan Midhunam | மிதுன ராசி பலன் ஏப்ரல் 10, 2023 | Midhuna rasi palan Tomorrow


உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். வாழ்வின் உயரத்தை எட்டுவீர்கள். உங்கள் ஆற்றல் மற்றும் உறுதி காரணமாக நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். நீங்கள் உங்களுக்கு கொடுத்த பணிகளை விரைவாக முடிப்பீர்கள். பணிகளை நல்ல தரத்துடன் அளிப்பீர்கள். உங்கள் திறமையின் மூலம் எளிதாக பணியாற்றுவீர்கள். நீங்கள் இருவரும் உறவுப் பிணைப்பை வலுப்படுத்துவீர்கள். உங்கள் இருவரிடையே நல்லுறவு காணப்படும். உங்களிடம் போதிய அளவு பணம் காணப்படும் உங்கள் சேமிப்பை உயர்த்துவீர்கள். உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும். இதன் மூலம் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya rasi palan Magaram | மகர ராசி பலன் ஏப்ரல் 10, 2023 | Magaram rasi palan Tomorrow


மிகச் சிறப்பான நாள். உங்கள் அனைத்து முயற்சிகளும் இன்று வெற்றி அடையும். உங்கள எண்ணங்களில் அமைதி வேண்டும். உங்கள் பணிகளை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் சக பணியாளர்களுக்கு நீங்கள் எடுத்துக்காட்டாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை வளர்க்க முடியும். இதனால் உறவை வலுப்படுத்த முடியும். பணபுழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பும் கணிசமாக உயரும். சிறப்பான ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya rasi palan Kumbam | கும்ப ராசி பலன் ஏப்ரல் 10, 2023 | Kumbam rasi palan Tomorrow


உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். நீண்ட கால திட்டம் சிறந்தது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடச் சூழல் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும். பணியிடத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும். நீங்கள் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் காணப்படுவீர்கள். இதனை உங்கள் துணைக்கு மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் இருவரிடையே அன்பு அதிகரிக்கும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் கையில் உள்ள பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். உங்கள் தன்னம்பிக்கை காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya rasi palan kadagam | கடக ராசி பலன் ஏப்ரல் 10, 2023 | Kadaga rasi palan Tomorrow


நீங்கள் பொறுமையுடன் அமைதியை கடைபிடிக்க வேண்டும். திட்டமிட்டு திறமையுடன் செயலாற்ற வேண்டியது அவசியம். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். பொறுமையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் சார்ந்த அணுகுமுறை தேவை. உங்கள் துணையின் உணர்வை புரிந்து கொள்ளுங்கள். அவர்/அவள் தனிமையை உணராத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். இருவரிடையே மகிழ்ச்சி நிலவ இது மிகவும் அவசியம். கவனமாக இல்லாவிட்டால் பணப்பற்றாக்குறை ஏற்படும். நீங்கள் சரியாக கையாண்டால் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம். அமைதியுடன் இருந்தால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். பதட்டப்பட்டு இன்றைய நாளின் மகிழ்ச்சியை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பல் வலி அல்லது தலை வலி ஏற்பட வாய்ப்புள்ளது உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya rasi palan Simmam | சிம்ம ராசி பலன் ஏப்ரல் 10, 2023 | Simma rasi palan Tomorrow


உங்கள் பொறுமை காரணமாக வெற்றி அடைவீர்கள். பொறுமை மற்றும் புத்திசாலித்தனம் பொறுத்து உங்கள் வளர்ச்சி அமையும். உங்கள் செயல்களில் கவனம் தேவை. உறுதியும் தைரியமும் இருந்தால் இன்று வெற்றி பெறலாம். சாதாரண பணிகளை விட இன்று பணிகள் கூடுதலாக இருக்கும். உங்கள் துணையுடன் உறவு நல்லுறவாக அமைய அவருடைய கருத்துக்கும் மதிப்பு அளியுங்கள். அவருடன் நட்புணர்வு கொள்ளுங்கள். உங்கள் அதிர்ஷ்டத்தை விட திறமையில் நம்பிக்கை வேண்டும். பணபுழக்கம் சிறப்பாக இருக்காது. என்றாலும் அதனை பெரிதாகக் கொள்ள வேண்டாம். நிதிநிலையை மேம்படுத்த முயலுங்கள். தோல் அரிப்புகளை தடுக்க எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும். அதிகமாக வெயிலில் சுற்றாதீர்கள்..

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya rasi palan Meenam | மீன ராசி பலன் ஏப்ரல் 10, 2023 | Meenam rasi palan Tomorrow


தற்போதைய நிலையிலிருந்து நீங்கள் முன்னேற நீங்கள் அதிகமாக முயல வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பின்மை உணர்வு அகலும். உற்சாகமாக இருக்க முயலுங்கள். நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணிகளை ஒப்படைக்கும் முன் தவறுகள் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டும். உங்கள் பிரியமானவரிடத்தில் அன்பாக இருக்க வேண்டும். இதனால் நல்லுறவை வளர்க்க இயலும். சில கடன்களை அடைக்க வேண்டியிருக்கும். அதனை உடனே செய்வதன் மூலம் பண இழப்பை தடுக்க முடியும். பணத்தை சிறப்பாக நிர்வகிக்க வேண்டியது அவசியம். தொண்டை வலிக்கான வாய்ப்பு உள்ளதால் குளிர்ந்த நீரைப் பருகுவதை தவிர்க்கவும். தலைவலியை தவிர்க்க அமைதியாக இருக்கவும். உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya rasi palan kanni | கன்னி ராசி பலன் ஏப்ரல் 10, 2023 | Kanni rasi palan Tomorrow


நீங்கள் விரும்பியது இன்று நிறைவேறும். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும் நீங்கள் இன்று மகிழ்ச்சியாக உற்சாகமாக இருப்பீ'ர்கள். நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விட அதிகப் பணிகளை கையாள்வீர்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்களின் நேர்மையைக் கண்டு உங்களைப் பாராட்டுவார்கள். நீங்களும் உங்கள் துணையும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இருவரும் இணைந்து திரைப்படம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்சிகளை கண்டு களிப்பீர்கள். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். உங்கள் திறமை காரணமாக உங்கள் சேமிப்பு பல மடங்கு உயரும். உங்கள் ஆரோக்கியம் சீரும் சிறப்புமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி