Indraya Rasi palan அனுசரித்து போங்க... இன்னைக்கு நேரம் சரியில்ல!

Indraya Rasi palan அனுசரித்து போங்க... இன்னைக்கு நேரம் சரியில்ல!
X
Rasi Palan Horoscope Today in tamil -மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 28 ஆம் நாளுக்கான [12 மார்ச் 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.



Rasi Palan Horoscope Today in tamil -நல்ல நேரம்:

காலை: 07.30 - 08.30 வரை

மாலை: 03.30 - 04.30 வரை

மேஷ ராசி பலன் மார்ச் 12, 2023 | Mesham rasi palan Today


உங்களுக்கு இனிய செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

துலாம் ராசி பலன் மார்ச் Thulam rasi palan Today


குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: அரக்கு

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷப ராசி பலன்


நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஓரளவு சேமிக்க முடியும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் உதவியால் நற்பலன்கள் கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிக ராசி பலன் மார்ச் 12, 2023 | Viruchigam rasi palan Today


நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். பெற்றோர் பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு ராசி பலன் மார்ச் 12, 2023 | Dhanusu rasi palan Today


குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

மிதுன ராசி பலன் மார்ச் 12, 2023 | Midhuna rasi palan Today


குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

மகர ராசி பலன் மார்ச் 12, 2023 | Magaram rasi palan Today


பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுப முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன அமைதி சற்று குறையும். பொறுமையை கடை பிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கும்ப ராசி பலன் மார்ச் 12, 2023 | Kumbam rasi palan Today


பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கடக ராசி பலன் மார்ச் 12, 2023 | Kadaga rasi palan Today


உங்களுக்கு சுப செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும். இதுவரை இருந்த நெருக்கடிகள் சற்று குறையும்

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

சிம்ம ராசி பலன் மார்ச் 12, 2023 | Simma rasi palan Today


குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

மீன ராசி பலன் மார்ச்9, 2023 | Meenam rasi palan Today


எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கன்னி ராசி பலன் மார்ச் 12, 2023 | Kanni rasi palan Today


குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வண்டி வாகனங்களுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!