Indraya Rasi Palan தொட்டதெல்லாம் துலங்கும் இந்த ராசிக்காரங்களுக்கு! | 1 மார்ச் 2023 ராசிபலன்

Indraya Rasi Palan தொட்டதெல்லாம் துலங்கும் இந்த ராசிக்காரங்களுக்கு! | 1 மார்ச் 2023 ராசிபலன்
X
Indraya Rasi Palan தொட்டதெல்லாம் துலங்கும் இந்த ராசிக்காரங்களுக்கு! | 1 மார்ச் 2023 ராசிபலன்

மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 17 ஆம் நாளுக்கான [01 மார்ச் 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். நாளைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்!

நல்ல நேரம்:

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

மேஷ ராசி பலன் மார்ச் 1, 2023 | Mesham rasi palan today


சாதுர்யமான பேச்சால் முன்னேற்றம் ஏற்படும் நாள். பணவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். உங்க துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு கூடும். தானியம் சம்பந்தமான வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

துலாம் ராசி பலன் மார்ச் 1, 2023 | Thulam rasi palan today


யாருக்கு கடன் கொடுத்தாலும் எழுத்து வடிவில் பரிவர்த்தனை செய்வது நல்லது. இல்லையென்றால் ஏமாற்றம் உங்களுக்கு தான். பணியிடத்தில் திட்டமிட்டு செயல்பட்டால், அனுகூலப் பலன்களை பெறலாம். திருமண காரியங்களில் இருந்த சிக்கல் விலகும். சிலருக்கு புதிய தொழில்நுட்ப சாதனம் வாங்கும் யோகம் உண்டு. தூரத்து சொந்தபந்தங்களிடம் இருந்து நற்செய்தி தேடி வரும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். காதலில் அன்பு பெருகும். வியாபாரம் பிரமாதமாக நடக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நோய்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

ரிஷப ராசி பலன் மார்ச் 1, 2023 | Rishabam rasi palan today


சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு சகஊழியர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வாகனத்தில் செல்லும் போது வேகத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உற்பத்தி தொடர்பான துறைகளில் லாபம் மேம்படும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். இருப்பினும், வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிக ராசி பலன் மார்ச் 1, 2023 | Viruchigam rasi palan today


தன்நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் கடின உழைப்புக்கு தகுந்து அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் காலதாமதமாகும். துணையுடன் வீண் வாக்குவாதங்களை குறைத்துக்கொண்டு, அனுசரித்து போவது நல்லது. இறை வழிபாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம் மனஅமைதி பெறமுடியும். வீண் செலவுகள் வீடு தேடி வரும். ஆக மொத்தம் சோதனை நிறைந்த நாளாக இருக்கும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

கும்ப ராசி பலன் மார்ச் 1, 2023 | kumbam rasi palan today


அனைவரிடமும் அனுசரித்து போவது நல்லது. தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்த்துவிடுங்கள். துணையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது, அமைதியை கடைப்பிடிப்பதன் மூலம் பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம். அரசு சார்ந்த துறையில் பணிபுரிவோர்களுக்கு பொறுப்பும், அதிகாரமும் அதிகரிக்கும். சிலருக்கு பூர்விக சொத்து மூலம் பணவரவு உண்டு. புதிய முயற்சிகளில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கட்டிடம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

கன்னி ராசி பலன் மார்ச் 1, 2023 | Kanni rasi palan today


முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். உடல் அளவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். லாபம் இரட்டிப்பாகும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பும் உள்ளது. கடன் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடனும் கவனத்துடனும் செயல்படவும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பணவரவு தாராளமாகவே இருக்கும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

மீனம் ராசி பலன் மார்ச் 1, 2023 | Meenam rasi palan today


கனவுகள் நனவாகும் நாள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு போட்டி தேர்வுகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணவரவு எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணியிடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிரச்சனை குறைந்து ஒற்றுமை மேம்படும். தூரத்து சொந்தம் வழியாக நல்ல செய்தி காதுக்கு வரும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. சுபம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

மிதுன ராசி பலன் மார்ச் 1, 2023 | Midhunam rasi palan today


உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வாழ்க்கை துணை பற்றிய சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். பணியிடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. செலவுகள் மிகுந்த நாளாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமான பயணங்கள் அனுகூலப் பலன்களை தரும். உறவினர் மற்றும் நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

தனுசு ராசி பலன் மார்ச் 1, 2023 | Dhanusu rasi palan today


நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள். புதிய முயற்சிகள் அதிர்ஷ்டமான பலன்களை தேடி தரும். உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியிடத்தில் கொடுத்த வேலையை குறித்த செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் நட்பாக பழகுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, நிலம் வாங்கும் யோகமும் உண்டு. சுமாராக சென்று வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கடக ராசி பலன் மார்ச் 1, 2023 | Kadagam rasi palan today


கலை சார்ந்த துறையில் வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் கவனத்துடன் செயல்படுவது சிறந்தது. நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். வயதில் மூத்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது அனுகூலப் பலன்களை தேடி தரும். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மகர ராசி பலன் மார்ச் 1, 2023 | Magaram rasi palan today


எதிலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது, எனவே திட்டமிட்டு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த பிரச்சனை குறையும். சுபகாரியம் சம்பந்தமான விஷயங்களில் தடை வரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணவரவு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்காது. இருப்பினும், சமாளிப்பீர்கள். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

சிம்ம ராசி பலன் மார்ச் 1, 2023 | Simmam rasi palan today


சிறிய முதலீட்டின் மூலம் பெரிய லாபத்தை பார்ப்பீர்கள். நண்பர்களும், குடும்பத்தினரும் உதவியாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்க நல்ல நாள். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பெண்களால் ஆதாயம் உண்டு. வாகங்களில் செல்லும்போது அதிக கவனத்துடன் செல்ல வேண்டும். வெளியூர் பயணங்களின் போது பணம் பத்திரம். முதுகு வலி பிரச்சனை ஏற்படலாம். ஆன்மீக வழிபாடு மனநிம்மதியை கொடுக்கும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Tags

Next Story