2023 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்: கும்ப ராசி

Kumba Rasi Palan 2022-2023 புத்தாண்டு கும்ப ராசி பொதுப்பலன்:
இந்த வருடம் உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் விரும்பும் வகையில் தொழிலில் முன்னேற்றம் பெற நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். திட்டங்களை தீட்டி அதன்படி நீங்கள் செயலாற்றுவீர்கள். சீரான வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு அவர்களை திருப்தியடையச் செய்யும். சொகுசு வாகனம் வாங்குவீர்கள்.உங்கள் திறமைக்கு சவால் விடும் பணிகளை திறமையுடன் மேற்கொள்வீர்கள். நியாயத்தை விரும்பும் உங்களின் இந்த குணம் உங்களுக்கு நீண்ட கால வெற்றியை பெற்றுத் தரும். உங்கள் முயற்சிகளுக்கான பலனை நீங்கள் உரிய நபர்களிடம் இருந்து பெறுவீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிப்பார்கள். உங்கள் பொது நடவடிக்கைகளில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருபீர்கள்.
குடும்பம்:
இந்த காலகட்டம் உங்கள் திருமண வாழ்க்கைக்கு நன்மை தருவதாக இருக்கும். தம்பதிகலுக்குள் இருக்கும் தவறான புரிதல்கள் நம்பிக்கை மற்றும் பேச்சு மூலம் தீர்க்கப்படும். காதலர்கள் தங்கள் ஆத்ம துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடலாம். உங்கள் திருமணம் பற்றிய பேச்சு வார்த்தை நடைபெறும். துணையை தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இருமுறை சரிபார்க்க வேண்டும்.
பொருளாதார நிலை :
இந்த வருடம் உங்கள் நிதிநிலைக்கு வசதியான நேரமாக இருக்கும். நீங்கள் தர்ம காரியங்களுக்காக பணத்தை செலவிடுவீர்கள். வீட்டு மராமத்து வேலைகளுக்கும் செலவு செய்யலாம். செலவுகள் வரம்பிற்குள் இருக்கும். மேலும் உங்களின் அனைத்து நிதிக் கடமைகளையும் நீங்கள் சந்திக்க முடியும். உங்களிடம் கடன் வாங்கியவர்களிடமிருந்து நிலுவையில் உள்ள கடன் தொகையையும் வசூலிக்க வாய்ப்பு உள்ளது.
தொழில்:
இந்த ஆண்டில், உங்கள் பணிகளைச் செய்யும்போது நீங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வேலையில்லாதவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வேலை தொடர்பான செயல்களை மேற்கொள்ளும் போது கவனமாக இருங்கள். உங்கள் தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சாதகமான நேரம் இது. பணிச்சுமை அதிகமாக இருக்கலாம், என்றாலும் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்போடு உங்கள் வேலையை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நிர்வாகத்துடன் நல்ல தொடர்பில் இருக்க முடியும்.
உடல் ஆரோக்கியம் :
இந்த வருடம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதிக வேலை காரணமாக உங்களுக்கு உடல் வலிகள் ஏற்படலாம். கண்டறியப்படாத சிக்கல்கள் உங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தலாம். நல்ல ஆரோக்கியத்திற்கும் ஆற்றலுக்கும் சத்தான உணவை உட்கொள்ளுங்கள்.
மாணவர்களுக்கு:
இந்த ஆண்டு, நீங்கள் நல்ல சாதனைகள் புரிவீர்கள். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விளையாட்டு நடவடிக்கைகளிலும் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் கல்வி நிறுவனத்திற்கு நற்பெயர் தந்து அதற்கு பெருமை சேர்ப்பீர்கள். போட்டித் தேர்வுகளில், விரும்பிய ரேங்க் பெற கடினமாக உழைக்க வேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu