2023 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்: கன்னி ராசி..

Kanni Rasi Palan 2023 in Tamil
Kanni Rasi Palan 2023 in Tamil-2023ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு எதிரிகள் தொந்தரவு நீங்கும். வேலை செய்யும் இடத்தில் பளுவும், மன அழுத்தமும் அதிகரிக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வீடு கட்ட கடன் வாங்குவீர்கள். மே மாதம் வரை குருபகவான் சாதகமாக உள்ளார்
குருவின் பார்வை கிடைப்பதால் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. அஷ்டம ஸ்தானத்தில் குருபகவான் இருப்பதால், கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். எனவே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண வரவுதடை படும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்ப பிரச்சினைகள் தீர குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
2023 புத்தாண்டு கன்னி ராசி பொதுப்பலன்:
இது உங்களுக்கு சாதகமான ஆண்டாக இருக்கும். நீங்கள் எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். இருமனநிலையை தவிர்த்து, உங்கள் செயல்களில் திறம்பட செயல்படுங்கள். பணிகளை குறித்த நேரத்தில் முடித்து பாராட்டு பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசையாக இருந்த நிலையான சொத்தை நீங்கள் வாங்குவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் திடீர் பயணங்கள் ஏற்படலாம். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒன்று கூடுவதற்கு இது ஒரு நல்ல நேரம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
குடும்பம்
உங்களுக்குத் தெரிந்த ஒருவருடன் காதல் வயப்படுவீர்கள். உங்கள் உள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் துணையின் கவனத்தை ஈர்ப்பதற்காக இல்லற வாழ்வில் புதிய செயல்களைத் தொடங்குவதற்கான நேரம் இது. இந்த காலகட்டத்தில் உங்கள் திருமணம் ஏற்பாடுகள் செய்ய உகந்த நேரம்.
பொருளாதார நிலை:
இந்த ஆண்டு உங்கள் நிதிநிலைக்கு ஒரு சுமாரான காலமாக இருக்கும். நீண்ட கால முதலீடுகள் மூலம் பணம் கிடைக்கும். பயணங்களின் போது புதிய நபர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் நிதி விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
தொழில்:
உங்கள் தொழிலுக்கு இந்த ஆண்டு ஒரு சாதாரண நேரம். மெதுவான முன்னேற்றம் காணப்படும். சில வேலைகளை நீங்கள் தள்ளிப் போடுவீர்கள். லதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்கள் வேலையை மிகுந்த கவனத்துடன் முடிக்க வேண்டும். வேலை தொடர்பான நடவடிக்கைகள் சுமூகமாக முடியும். உங்கள் திறமைகளை நீங்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். உங்கள் வேலையை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
உடல் ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தைப் பேண உங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். இரத்த அழுத்த பிரச்சினைகள் வரக்கூடும். தோல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சரியான கவனிப்பு அவசியம்.
மாணவர்களுக்கு:
இந்த ஆண்டு, உங்கள் விருப்பப்படி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ஆசிரியர்களும் பெற்றோரும் உங்களைப் பற்றி பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள். அதிக நம்பிக்கையுடன், உயர் படிப்பைத் தொடங்குவீர்கள். உங்கள் தகவல்தொடர்புகளை நீங்கள் பெரிதும் மேம்படுத்துவீர்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu